Wednesday, October 27, 2021

 ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினருடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின், இனப்படுகொலை மற்றும் பாரிய அட்டூழியங்கள் தடுப்பு அமைச்சரின் முதல் அதிகாரபூர்வ சந்திப்பு! 

கடந்த வெள்ளிக்கிழமை 22ஆம் திகதி ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினரும் இன அழிப்பிற்கு எதிரான பிரபல செயற்பாட்டாளருமான அரீஸ் பார்பிக்கியான் அவர்களை அவரது அலுவலகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்பு மற்றும் பாரிய அட்டூழிய குற்றத் தடுப்புக்கான அமைச்சர் றோய் விக்னராஜா அவர்கள் அதிகாரபூர்வமாகச் சந்தித்தார்.


நா.க.த.அ அமைச்சர், ஈழத் தமிழர் பற்றி, ஒன்றாரியோ அரசவை உறுப்பினருக்கு விளக்குகையில், தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசத்தினர், இலங்கைத் தீவு ஒரு தமிழ், இரண்டு சிங்களம் என மூன்று தனித்தனி இராட்சியங்களால் ஆனது. 1833ல் பிரித்தானிய ஆட்சியாளர்கள், நிர்வாக சௌகரியத்திற்காக இம் முன்று இராட்சியங்களையும் ஒருங்கிணைத்ததன் மூலம் தற்போதைய குழப்ப நிலைக்கு வழி
வகுத்தனர் என்று தெரிவித்தார்.



தமிழீழ மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகியுள்ளனர், மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பாதிக்கபட்டவர்களது நீதிக்காக வாதிடுவதுடன் தமிழ் தேசத்தின் இறையாண்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் பாடுபடுகிறது. தமிழர்கள், உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையுடைய ஒரு தனித்துவம் வாய்ந்த தேசம், எனறும்;, நா.க.த.அ அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

 ஒரு மணிநேரம் நீடித்த இச்சந்திப்பின் பொழுது பேசப்பட்ட பலவிடயங்களில் ஒன்றாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழருக்கு நடந்த இன அழிப்பு சம்பந்தமாகக் கனடாவின் மூன்று நிலை அரசுகள் ஊடாகவும்; இன அழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் பல்லின மக்களின் நிறுவனங்கள் அமைப்புகள் போன்றவற்றூடாகவும் தமிழர் இன அழிப்பிற்கான நீதியை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றி முக்கியமாக ஆராயப்பட்டது. 


தமிழர் மீது நடத்தப்பட்டுள்ள இன அழிப்பு சம்பந்தமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மக்களும் எவ்வாறு சர்வதேச அரசாங்கங்களையும், மனித உரிமைகள் சார் அமைப்புக்களையும் அணுகி தமக்கான நீதியைப் பெறுவதற்கான வழிவகைகளை எவ்வகையில் ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது பற்றிய அறிவுரைகளை ஒன்ராரியோ பாராளுமன்ற உறப்பினர் அரீஸ் பார்பிக்கியான் அவர்கள்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சருக்கு வழங்கினார். 




மேலும் பார்பிக்கியான் அவர்கள், “நான் பதவியில் இருக்கும் போது மட்டுமல்ல இல்லாவிடினும் கூட எனது கொள்கைப்பற்றுறுதியால் இன அழிப்பிற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவேன்.” “ஆகவே, அரசியலுக்கு அப்பால்பட்டு இவ்விடயத்தில் எனது அனுபவப்பகிர்வுகளாக அறிவுரைகளையும் ஆதரவினையும் வழங்குவேன்.” என்று உறுதிபடக் கூறினார். மேலும் 2019 ஆம் ஆண்டு, தான், தமிழர் இன அழிப்பு உட்பட ஏழு நாடுகளில் இடம் பெற்ற இன அழிப்புகள் சம்பந்தமாக ஒன்ராரியோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை இலக்கம் 97ன (BILL 97); பிரதி ஒன்றினையும், 2021 (இவ்வருடம்) மே மாதம் ஆறாந் திகதி விஜய் தணிகாசலம் அவர்களால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை இலக்கம் 104 (BILL 104) இற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரை (ஹன்சாட் பதிவு) ஒன்றினையும் வழங்கினார். அத்தோடு இதே உரையின் தமிழாக்கத்தை உள்ளடக்கிய அவருடைய (AGINCOURT) தொகுதி  மக்களுக்கான கோடைகாலச் செய்தி மடல் ஒன்றினையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரிடமும் கையளித்தார். 

இன அழிப்பு சம்பந்தமான எவ்வுதவிகள் தேவையெனிலும் தயங்காது தன்னை நாடுமாறு கூறிய அவர் ஒரு இன அழிப்பின் போது இனப்படுகொலைக்கு உள்ளாகிய மக்களைவிட அந்த இனத்தில் எஞ்சி இருக்கின்ற மக்களுக்கு இன அழிப்பு மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவது என்பதே மிக முக்கியம் என்று கூறினார். 


2021 (இவ்வருடம்) மே மாதம் ஆறாந் திகதி விஜய் தணிகாசலம் அவர்களால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை இலக்கம் 104(BILL 104) இற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அரீஸ் பார்பிக்கியான் ஆற்றிய உரையின் தமிழாக்கம் கீழேயுள்ளது. 



                    

  Legislative 

Assembly of Ontario



42 வது ஒன்றாரியோ பாராளுமன்றம், 1 வது அமர்வு விவாதங்களின் உத்தியோகபூர்வமான அறிக்கை (ஹன்சார்ட்) எண் 259

மே 6, 2021

கௌரவ சபாநாயகர் அவர்களே!

எனது சகாக்கள் முழு தமிழ் இனப்படுகொலையையும் மிகவும் தெளிவாக படங்களுடன்

இங்கு விபரித்தனர். ஒன்ராறியோ மக்களுக்கும் கனடா மக்களுக்கும் இந்த மன்றம்

இனப்படுகொலையை அங்கீகரிப்பது ஏன் முக்கியம் என்பதையும், இந்த மன்றத்திற்கு மசோதா 104 தொடர்பிலான அம்சங்கள் என்ன என்பதையும் நான் விபரிக் விரும்புகிறேன். கௌரவ சபாநாயகர் அவர்களே! , இந்த சபையில் எனது மனதிற்கு பிடித்தமான ஒரு முக்கியமான விடயமாகப் பேச எழுந்து நிற்பது எனது பெருமை அளிக்கின்றது. முதலாவதாக, எனது பாராளுமன்ற சகாவான விஜய் தணிகாசலம், அவரது குடும்பம் மற்றும் , தமிழ்ச் சமூகத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையிலும் மைல் கல்லாக விளங்கும்

இந்த முக்கியமான விடயத்திற்காக அவரை வாழ்த்துகிறேன்.


2009 ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் இலங்கையில் தமிழ் சமூகம் சந்தித்த அதிர்ச்சியையும் துன்புறுத்தலையும் இந்த மன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு மண்வெட்டியை ஒரு மண்வெட்டி என்று அழைப்பது மிகவும் அவசியம். தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்றால் அது ஒரு இனப்படுகொலையே ஆகும். சத்தியத்திற்காக எழுந்து நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தப்பிப்பிழைத்தவர்களுக்கும் நீதி வழங்கக் கோருவதும் மிகவும் அவசியமானதாகும்.

கௌரவ சபாநாயகர அவர்களே!, கடந்த காலத்தை ஒப்புக்கொள்வதற்காகவே நாங்கள்

இன்று இங்கே எழுந்து நிற்கிறோம் தவிர குற்றஞ்சாட்டுவதற்காக அல்ல. இரண்டு காரணங்களுக்காக தமிழ் இனப்படுகொலை என்னும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம். முதலாவதாக, கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட காயங்களை மூடுவது மற்றும் குணப்படுத்துவது: பாதிக்கப்பட்டவர்களுக்கு குணப்படுத்துதல் மற்றும் காயங்களை மூடுவது என்பது , தனித்தனியாகவும் கூட்டாகவும், நல்லிணக்கத்தை அடைய முடியாது. மேலும், புகழ்பெற்ற இனப்படுகொலை தொடர்பானஅறிஞர் கிரிகோரி ஸ்டாண்டன் அவர்கள் கூறியது போல, முறையான மறுப்புக் கொள்கையே, இனப்படுகொலையின் இறுதி கட்டமாகும். பாதிக்கப்பட்டவருக்கு கூடுதலாக, மறுப்பு கொள்கை பாதிக்கப்பட்ட தேசத்தின் அல்லது

இனத்தின் தலைமுறைகளின் எதிர்காலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கவும் பாதிக்கவும் செய்கிறது.

ஆர்மீனிய இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்த ஒருவரின் மூன்றாவது தலைமுறையின் பேரன் என்ற வகையில் குற்றவாளி என் தாத்தாவிற்கு நிகழ்ந்த மனிதாபிமானமற்ற சிகிச்சை, அவரது உயிர்வாழும் கதை மற்றும் எங்கள் குடும்பத்தின் முழு தலைமுறையினரின் இழப்பையும் கேள்விப்படுகின்றபோது அல்லது மறுக்கும்போது நான் அதிர்ச்சியை அனுபவிக்கிறேன். எனவே, மறுப்புவாதிகளுக்கு அவர்களின் திருத்தல்வாத வரலாறு மற்றும் அவமானகரமான சுழற்சிக்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம் என்று ஒரு செய்தியை அனுப்புவது மிகவும் முக்கியமானது.

இரண்டாவது காரணம், கௌரவ சபாநாயகர் அவர்களே! , இந்த முட்களைப் போன்ற பிரச்சினையை நாம் ஏன் நேருக்கு நேர் கவனிக்க வேண்டும் என்றால், கடந்த கால

 தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள மனிதகுலத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம், அத்துடன் இந்த கொடுமைகளை மீண்டும் மீண்டும் நாம் செய்யமலிருக்க வேண்டும்.

20 ஆம் நூற்றாண்டு கண்ணீரால் கரைந்த நூற்றாண்டு என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் 60 மில்லியன் மக்கள் இனப்படுகொலை மற்றும் கொடூரமான செயல்களால் கொல்லப்பட்டனர். துரதிட்ட வசமாக, எந்தவொரு சமூகமும் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. ஒரு சமுதாயத்தை அணிதிரட்டுவதற்கும் ஒருவருக்கொருவர் எதிராகத் திரும்புவதற்கும் உங்களுக்கு ஒரு மோசமான நெருப்பைப் போன்ற தனிநபர் இருப்பார், நாங்கள் அவர்களுக்கு எதிராக செயற்பட வேண்டும்.

ஒட்டோமான் பேரரசில் ஆர்மீனியர்கள், கிரேக்கர்கள், போண்டியர்கள், அசீரியர்கள் மற்றும் கல்தேயர்கள் ஆகியோரின் இனப்படுகொலையை தலாத் பாசா எவ்வாறு சூத்திரதாரி செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். ஸ்டாலின் உக்ரேனிய ஹோலோடோமரை எவ்வாறு ஏற்படுத்தினார் என்பதை நாங்கள் பார்த்தோம். ஹிட்லர் ஹோலோகாஸ்டை எவ்வாறு தொடங்கினார் என்பதை நாங்கள் பார்த்தோம். கம்போடிய இனப்படுகொலையை போல் பாட் எவ்வாறு தூண்டினார் என்பதை நாங்கள் பார்த்தோம். பால் ககாமே ருவாண்டாவின் இனப்படுகொலையை எவ்வாறு தூண்டினார் என்பதை நாங்கள் பார்த்தோம். மற்றும் பல, கௌரவ சபாநயாகர் அவர்களே, நான் இந்த தகவல்களை

இன்றைய நாள் முழுவதும் சொல்ல முடியும்.

எனவே, வருங்கால சந்ததியினரை உணர்ந்து, அமைதியான சகவாழ்வு மற்றும் நமது மாறுபட்ட ஒப்பனைக்கு மரியாதை செலுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், நமது சமூகத்தில் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு அவசியம். அவ்வாறு செய்வதன் மூலம், 21 ஆம் நூற்றாண்டை 20 ஆம் நூற்றாண்டை விட சிறந்த நூற்றாண்டாகவும், மனித நூற்றாண்டாகவும் மாற்ற முடியும்.

"மீண்டும் ஒருபோதும்" என்பது மீண்டும் ஒருபோதும் என்ற அர்த்தத்தையே உடையது, எனவே, எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு சிறந்த உலகத்தை விட்டு வெளியேற எங்கள் திசைகாட்டி உதவிட வேண்டும். இது எங்கள் தலைமுறையின் மரபாகவும் இருக்க வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!, தமிழ் மக்களோடு ஒற்றுமையுடனும் செயற்படவும் இந்த மசோதாவை ஏற்றுக்கொள்வதற்;கான முக்கியத்துவத்துக்காகவுமே நான் இங்கு நிற்கிறேன். 

அரிஸ் பாபிகியன்- மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்-ஒன்றாரியோ

Hansard Transcript 2021-May-06 | Legislative Assembly of Ontario (ola.org)