Wednesday, October 27, 2021

 ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினருடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின், இனப்படுகொலை மற்றும் பாரிய அட்டூழியங்கள் தடுப்பு அமைச்சரின் முதல் அதிகாரபூர்வ சந்திப்பு! 

கடந்த வெள்ளிக்கிழமை 22ஆம் திகதி ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினரும் இன அழிப்பிற்கு எதிரான பிரபல செயற்பாட்டாளருமான அரீஸ் பார்பிக்கியான் அவர்களை அவரது அலுவலகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்பு மற்றும் பாரிய அட்டூழிய குற்றத் தடுப்புக்கான அமைச்சர் றோய் விக்னராஜா அவர்கள் அதிகாரபூர்வமாகச் சந்தித்தார்.


நா.க.த.அ அமைச்சர், ஈழத் தமிழர் பற்றி, ஒன்றாரியோ அரசவை உறுப்பினருக்கு விளக்குகையில், தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசத்தினர், இலங்கைத் தீவு ஒரு தமிழ், இரண்டு சிங்களம் என மூன்று தனித்தனி இராட்சியங்களால் ஆனது. 1833ல் பிரித்தானிய ஆட்சியாளர்கள், நிர்வாக சௌகரியத்திற்காக இம் முன்று இராட்சியங்களையும் ஒருங்கிணைத்ததன் மூலம் தற்போதைய குழப்ப நிலைக்கு வழி
வகுத்தனர் என்று தெரிவித்தார்.



தமிழீழ மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகியுள்ளனர், மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பாதிக்கபட்டவர்களது நீதிக்காக வாதிடுவதுடன் தமிழ் தேசத்தின் இறையாண்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் பாடுபடுகிறது. தமிழர்கள், உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையுடைய ஒரு தனித்துவம் வாய்ந்த தேசம், எனறும்;, நா.க.த.அ அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

 ஒரு மணிநேரம் நீடித்த இச்சந்திப்பின் பொழுது பேசப்பட்ட பலவிடயங்களில் ஒன்றாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழருக்கு நடந்த இன அழிப்பு சம்பந்தமாகக் கனடாவின் மூன்று நிலை அரசுகள் ஊடாகவும்; இன அழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் பல்லின மக்களின் நிறுவனங்கள் அமைப்புகள் போன்றவற்றூடாகவும் தமிழர் இன அழிப்பிற்கான நீதியை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றி முக்கியமாக ஆராயப்பட்டது. 


தமிழர் மீது நடத்தப்பட்டுள்ள இன அழிப்பு சம்பந்தமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மக்களும் எவ்வாறு சர்வதேச அரசாங்கங்களையும், மனித உரிமைகள் சார் அமைப்புக்களையும் அணுகி தமக்கான நீதியைப் பெறுவதற்கான வழிவகைகளை எவ்வகையில் ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது பற்றிய அறிவுரைகளை ஒன்ராரியோ பாராளுமன்ற உறப்பினர் அரீஸ் பார்பிக்கியான் அவர்கள்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சருக்கு வழங்கினார். 




மேலும் பார்பிக்கியான் அவர்கள், “நான் பதவியில் இருக்கும் போது மட்டுமல்ல இல்லாவிடினும் கூட எனது கொள்கைப்பற்றுறுதியால் இன அழிப்பிற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவேன்.” “ஆகவே, அரசியலுக்கு அப்பால்பட்டு இவ்விடயத்தில் எனது அனுபவப்பகிர்வுகளாக அறிவுரைகளையும் ஆதரவினையும் வழங்குவேன்.” என்று உறுதிபடக் கூறினார். மேலும் 2019 ஆம் ஆண்டு, தான், தமிழர் இன அழிப்பு உட்பட ஏழு நாடுகளில் இடம் பெற்ற இன அழிப்புகள் சம்பந்தமாக ஒன்ராரியோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை இலக்கம் 97ன (BILL 97); பிரதி ஒன்றினையும், 2021 (இவ்வருடம்) மே மாதம் ஆறாந் திகதி விஜய் தணிகாசலம் அவர்களால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை இலக்கம் 104 (BILL 104) இற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரை (ஹன்சாட் பதிவு) ஒன்றினையும் வழங்கினார். அத்தோடு இதே உரையின் தமிழாக்கத்தை உள்ளடக்கிய அவருடைய (AGINCOURT) தொகுதி  மக்களுக்கான கோடைகாலச் செய்தி மடல் ஒன்றினையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரிடமும் கையளித்தார். 

இன அழிப்பு சம்பந்தமான எவ்வுதவிகள் தேவையெனிலும் தயங்காது தன்னை நாடுமாறு கூறிய அவர் ஒரு இன அழிப்பின் போது இனப்படுகொலைக்கு உள்ளாகிய மக்களைவிட அந்த இனத்தில் எஞ்சி இருக்கின்ற மக்களுக்கு இன அழிப்பு மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவது என்பதே மிக முக்கியம் என்று கூறினார். 


2021 (இவ்வருடம்) மே மாதம் ஆறாந் திகதி விஜய் தணிகாசலம் அவர்களால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை இலக்கம் 104(BILL 104) இற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அரீஸ் பார்பிக்கியான் ஆற்றிய உரையின் தமிழாக்கம் கீழேயுள்ளது. 



                    

  Legislative 

Assembly of Ontario



42 வது ஒன்றாரியோ பாராளுமன்றம், 1 வது அமர்வு விவாதங்களின் உத்தியோகபூர்வமான அறிக்கை (ஹன்சார்ட்) எண் 259

மே 6, 2021

கௌரவ சபாநாயகர் அவர்களே!

எனது சகாக்கள் முழு தமிழ் இனப்படுகொலையையும் மிகவும் தெளிவாக படங்களுடன்

இங்கு விபரித்தனர். ஒன்ராறியோ மக்களுக்கும் கனடா மக்களுக்கும் இந்த மன்றம்

இனப்படுகொலையை அங்கீகரிப்பது ஏன் முக்கியம் என்பதையும், இந்த மன்றத்திற்கு மசோதா 104 தொடர்பிலான அம்சங்கள் என்ன என்பதையும் நான் விபரிக் விரும்புகிறேன். கௌரவ சபாநாயகர் அவர்களே! , இந்த சபையில் எனது மனதிற்கு பிடித்தமான ஒரு முக்கியமான விடயமாகப் பேச எழுந்து நிற்பது எனது பெருமை அளிக்கின்றது. முதலாவதாக, எனது பாராளுமன்ற சகாவான விஜய் தணிகாசலம், அவரது குடும்பம் மற்றும் , தமிழ்ச் சமூகத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையிலும் மைல் கல்லாக விளங்கும்

இந்த முக்கியமான விடயத்திற்காக அவரை வாழ்த்துகிறேன்.


2009 ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் இலங்கையில் தமிழ் சமூகம் சந்தித்த அதிர்ச்சியையும் துன்புறுத்தலையும் இந்த மன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு மண்வெட்டியை ஒரு மண்வெட்டி என்று அழைப்பது மிகவும் அவசியம். தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்றால் அது ஒரு இனப்படுகொலையே ஆகும். சத்தியத்திற்காக எழுந்து நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தப்பிப்பிழைத்தவர்களுக்கும் நீதி வழங்கக் கோருவதும் மிகவும் அவசியமானதாகும்.

கௌரவ சபாநாயகர அவர்களே!, கடந்த காலத்தை ஒப்புக்கொள்வதற்காகவே நாங்கள்

இன்று இங்கே எழுந்து நிற்கிறோம் தவிர குற்றஞ்சாட்டுவதற்காக அல்ல. இரண்டு காரணங்களுக்காக தமிழ் இனப்படுகொலை என்னும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம். முதலாவதாக, கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட காயங்களை மூடுவது மற்றும் குணப்படுத்துவது: பாதிக்கப்பட்டவர்களுக்கு குணப்படுத்துதல் மற்றும் காயங்களை மூடுவது என்பது , தனித்தனியாகவும் கூட்டாகவும், நல்லிணக்கத்தை அடைய முடியாது. மேலும், புகழ்பெற்ற இனப்படுகொலை தொடர்பானஅறிஞர் கிரிகோரி ஸ்டாண்டன் அவர்கள் கூறியது போல, முறையான மறுப்புக் கொள்கையே, இனப்படுகொலையின் இறுதி கட்டமாகும். பாதிக்கப்பட்டவருக்கு கூடுதலாக, மறுப்பு கொள்கை பாதிக்கப்பட்ட தேசத்தின் அல்லது

இனத்தின் தலைமுறைகளின் எதிர்காலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கவும் பாதிக்கவும் செய்கிறது.

ஆர்மீனிய இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்த ஒருவரின் மூன்றாவது தலைமுறையின் பேரன் என்ற வகையில் குற்றவாளி என் தாத்தாவிற்கு நிகழ்ந்த மனிதாபிமானமற்ற சிகிச்சை, அவரது உயிர்வாழும் கதை மற்றும் எங்கள் குடும்பத்தின் முழு தலைமுறையினரின் இழப்பையும் கேள்விப்படுகின்றபோது அல்லது மறுக்கும்போது நான் அதிர்ச்சியை அனுபவிக்கிறேன். எனவே, மறுப்புவாதிகளுக்கு அவர்களின் திருத்தல்வாத வரலாறு மற்றும் அவமானகரமான சுழற்சிக்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம் என்று ஒரு செய்தியை அனுப்புவது மிகவும் முக்கியமானது.

இரண்டாவது காரணம், கௌரவ சபாநாயகர் அவர்களே! , இந்த முட்களைப் போன்ற பிரச்சினையை நாம் ஏன் நேருக்கு நேர் கவனிக்க வேண்டும் என்றால், கடந்த கால

 தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள மனிதகுலத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம், அத்துடன் இந்த கொடுமைகளை மீண்டும் மீண்டும் நாம் செய்யமலிருக்க வேண்டும்.

20 ஆம் நூற்றாண்டு கண்ணீரால் கரைந்த நூற்றாண்டு என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் 60 மில்லியன் மக்கள் இனப்படுகொலை மற்றும் கொடூரமான செயல்களால் கொல்லப்பட்டனர். துரதிட்ட வசமாக, எந்தவொரு சமூகமும் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. ஒரு சமுதாயத்தை அணிதிரட்டுவதற்கும் ஒருவருக்கொருவர் எதிராகத் திரும்புவதற்கும் உங்களுக்கு ஒரு மோசமான நெருப்பைப் போன்ற தனிநபர் இருப்பார், நாங்கள் அவர்களுக்கு எதிராக செயற்பட வேண்டும்.

ஒட்டோமான் பேரரசில் ஆர்மீனியர்கள், கிரேக்கர்கள், போண்டியர்கள், அசீரியர்கள் மற்றும் கல்தேயர்கள் ஆகியோரின் இனப்படுகொலையை தலாத் பாசா எவ்வாறு சூத்திரதாரி செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். ஸ்டாலின் உக்ரேனிய ஹோலோடோமரை எவ்வாறு ஏற்படுத்தினார் என்பதை நாங்கள் பார்த்தோம். ஹிட்லர் ஹோலோகாஸ்டை எவ்வாறு தொடங்கினார் என்பதை நாங்கள் பார்த்தோம். கம்போடிய இனப்படுகொலையை போல் பாட் எவ்வாறு தூண்டினார் என்பதை நாங்கள் பார்த்தோம். பால் ககாமே ருவாண்டாவின் இனப்படுகொலையை எவ்வாறு தூண்டினார் என்பதை நாங்கள் பார்த்தோம். மற்றும் பல, கௌரவ சபாநயாகர் அவர்களே, நான் இந்த தகவல்களை

இன்றைய நாள் முழுவதும் சொல்ல முடியும்.

எனவே, வருங்கால சந்ததியினரை உணர்ந்து, அமைதியான சகவாழ்வு மற்றும் நமது மாறுபட்ட ஒப்பனைக்கு மரியாதை செலுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், நமது சமூகத்தில் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு அவசியம். அவ்வாறு செய்வதன் மூலம், 21 ஆம் நூற்றாண்டை 20 ஆம் நூற்றாண்டை விட சிறந்த நூற்றாண்டாகவும், மனித நூற்றாண்டாகவும் மாற்ற முடியும்.

"மீண்டும் ஒருபோதும்" என்பது மீண்டும் ஒருபோதும் என்ற அர்த்தத்தையே உடையது, எனவே, எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு சிறந்த உலகத்தை விட்டு வெளியேற எங்கள் திசைகாட்டி உதவிட வேண்டும். இது எங்கள் தலைமுறையின் மரபாகவும் இருக்க வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!, தமிழ் மக்களோடு ஒற்றுமையுடனும் செயற்படவும் இந்த மசோதாவை ஏற்றுக்கொள்வதற்;கான முக்கியத்துவத்துக்காகவுமே நான் இங்கு நிற்கிறேன். 

அரிஸ் பாபிகியன்- மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்-ஒன்றாரியோ

Hansard Transcript 2021-May-06 | Legislative Assembly of Ontario (ola.org)



Thursday, March 4, 2021

 



இலங்கையின் இனவெறி வன்முறை வரலாறு 4 - 

தேசமுகி

 மலையகத்திலிருந்து வந்து வடக்கு கிழக்கு போராளிகளுடன் தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் இணைந்து களமாடி காவியமான பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள்  மலையகத் தமிழ் மாவீரர்களுக்கும் காணிக்கையாக வரலாறு விரிகிறது. 

                                  
 மலையகத் தமிழர்

மலையக மக்களின் பலம் அவர்கள் இலங்கையில் 15 இலட்சம் பேர் வாழ்கின்றனர் என்பதாகும். ஆனாலும் இத்தனை இலட்சம் பேரும் நிலத்தொடர்பற்ற வகையில் தமது வாழ்விடங்களைக் கொண்டுள்ளது பலவீனமாகும். வடகிழக்கு வாழ் இலங்கைத் தமிழர் போன்று இவர்கள் குறித்த ஒரு நிலத் தொடர்புள்ள பிரதேசத்தில் வாழவில்லை. பல்வேறு மாவட்டங்களில் சிங்கள மக்களுடன் இணைந்ததான பிரதேசங்களில் வாழ்கின்றனர். எனவே அரசநிர்வாக விடயங்களில் சிங்கள கிராம நிலதாரிகள் இவர்களை புறக்கணிப்பது இலகுவாகி விடுகின்றது. இவர்கள் செறிவாக வாழும் நுவரெலியா பதுளை மாவட்டங்களிலேயே புறக்கணிப்பு பரவலாக இருக்கும்போது செறிவு குறைவாகவுள்ள மாவட்டங்களில் நிலை படுமோசமாகவே இருக்கும்.               

    இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையக மக்களின் 250 ஆண்டுகளுக்கு மேலான இலங்கை வாழ் வரலாற்றில் 70வருடகால அரசியல் தொழிற்சங்க வரலாறும் உள்ளடங்குகின்றது.  1947 களில் இவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் 7 அங்கத்தவர்களைக் கொண்டிருந்தனர். அது இனவாதிகளின் கண்களை உறுத்தவே மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. பின்னர் 1977 வரை நியமனத் தெரிவின் மூலம் அரசியல் காலம் தள்ளியமையும் 1977க்குப்பின் இன்றுவரை அவர்களின் அபிவிருத்திப் பணிகள் என்ற போர்வையில்  அரசாங்கத்துடனான கைகோர்ப்புடன் அரசியல் நகர்ந்து செல்ல இன்னும் அடிப்படை பிரச்சினைகளில் இருந்து முழுமையாக விடுபடாத மக்கள் கூட்டமாகவே வாழ்ந்து வருகின்றனர். 

         எவ்வகையிலேனும் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திகளை புறந்தள்ளிப் பார்க்காது இவர்களது அடிப்படை பிரச்சினைகள் குறித்து பார்வையை செலுத்துவது பொருத்தமானது. இன்னும் மலையகத் தமிழர்களில் பலருக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரமோ, தேசிய அடையாள அட்டையோ  இல்லை. (இவை  முறையாகப் பதியப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டும் உண்டு.) இன்னும் மலையகத் தமிழர்களில்  பலருக்கு தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும். தமது ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கும் வாக்குரிமை முழுமையாக இல்லை அல்லது வாக்காளர் இடாப்புகளில் அவர்களை பதிவு செய்துகொள்வதில் திட்டமிட்ட புறக்கணிப்பு இடம்பெறுகின்றது. ஏன் இவர்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்றுகூட இன்னும் முழுமையாக பிரகடனப்படுத்தப்படவில்லை. இந்த நிலைமைக்கு காரணம் என்ன?

                       


     தமிழர் மீதான இனவழிப்பில் முதலில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட வாக்குரிமைப் பறிப்பும் மலையகத் தமிழர்களின் அரசியல்  வரலாற்றையும் அதன் பின்ணியையும் பாhக்க வேண்டும்;. இலங்கைத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் என்பதைவிட பூர்விகக் குடிகள் அல்ல இவர்கள் என்பதைக் குறிக்குமுகமாக “மலையகத் தமிழர்” என்று குறிக்கப்பட்டனர் எனக் கருதும் ஆய்வாளர்கள் கூற்றும் உண்டு. இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். ஏனெனில் பூர்விகக் குடிகள் அல்லாத மலாயர்கள் பறங்கிகள் எல்லாம் இலங்கையின் குடிகளாக வாக்குரிமையுடன் இருக்கும் பொழுது இவர்களை மட்டும் வந்தேறு குடிகள் என்று பிரித்து வைக்கும் மனப்பான்மையும்,  இலங்கையில் வந்து குடியேறிய இவர்களின் வரலாறும் விரிவாக திட்டமிடப்பட்ட இனவழிப்பின் ஓரங்கமாகவே ஆராயப்பட வேண்டிய ஒன்று. இங்கு மலையகத் தமிழர்கள் என்று பயன்படுத்துவது வடக்குக் கிழக்குத் தமிழர்கள் போல் மலையகத்தில் வாழும் எமது தமிழ்ச் சமூகம் எனும் கருத்தியல் அடிப்படையே ஆகும். 

            விஜயனின் வரவு முதல் பார்த்தால் சிங்களர்கள் கூட  வந்தேறுகுடிகளின் மரபு வழியினரே.   விஜயனின் 700 தோழர்களுக்கான மனைவிகளை தமிழ்நாட்டில்  இருந்து எடுத்தது மட்டுமன்றி  1400களில் மொகலாயப் படையெடுப்பின் பொழுது இங்கு வந்து யாழ்ப்பாணம், புத்தளம், நீர்கொழும்பு கொழும்புப் பகுதிகளில் குடியேறிய வணிகத் (செட்டிதமிழர்கள்) சிவன் கோயிலைக் கட்டிய  வரலாறு என விரிந்து செல்லும் வரலாறு. கோப்பித் தோட்டங்களிற்கான தொழிலாளர்கள் தாமாக வந்தவர்களை விட அடிமைகளாக கொண்டு வரப்பட்டவர்கள் எனும் வரலாறும் உண்டு. இதன் முன்பே இந்தியத் தமிழர்கள் இலங்கையின் மையப்பகுதியை நோக்கி தொழில் நிமித்தம் குடியேறியதற்கும் தமிழ் மன்னர்களின் ஆட்சிகளும் என மற்றும் பலகாரணங்களும் உண்டு. அதற்கு முன்பும் தமிழ்நாட்டு மக்கள் இங்கு குடியேறியுள்ள வரலாறும் உண்டு.  

1600 களில் இந்தியாவில் நிலவரிகளை விதித்து  ஏழை விவசாயிகள் மீது திணித்து இரத்தம் குடிக்கும் அட்டைபோல் அவர்கள் உழைப்பை எல்லாம் உறுஞ்சிய பிரிட்டிஷாரின் ஆட்சி செல்வ வளம் கண்டது. வங்காளத்தில் சாசுவத நிலவரி, தென்னிந்தியாவில் ரயத்துவாரி, வட இந்தியாவில் மௌஜாவாரி, பஞ்சாப்பில் பஞ்சாயத்து வாரி என வரி விதித்து விவசாயிகளின் வயிற்றில் அடித்துத் தமது வருவாயைப் பெருக்கிக் கொண்டது பிரிட்டிஷ் அரசாங்கம். அன்றும் , இன்றும் மானிட வர்க்கத்திற்கே உணவு வழங்கும் உத்தம விவாசாயிகளின் வாழ்வே குறிப்பாகத் தொழிலாளர்களின் வாழ்வே ஆட்சியாளர்களினதும், ஆட்சியைத் தீர்மானிக்கும் செல்வந்தர்களின் சுரண்டலுக்கும் உள்ளாகி வருகின்றது. 

   1678-1685 வரை ஏழுவருடம் நீடித்த தாதுவருடப் பஞ்சமானது பதினைந்து இலட்சம் மக்களைக் காவு கொண்டது. இந்தப் பஞ்சத்தில் தப்பிப் பிழைப்பதற்காக ஈழத்தில் சென்று குடியேறிய தமிழர்கள் தாங்கள் குடியேறிய இடங்களில் மாரியம்மனை வைத்து வழிபாடு செய்தனர்.  சிவனை வழிபடும் செட்டியார், முதலியார் என்கின்ற வணிகர் இனமும்  இவர்களுள் அடங்குவர். இதற்கான ஆதாரமாக 1706 இல் கண்டியில் இருந்து தூது சென்ற குழுவில் கண்டியில் வாழ்ந்த சிதம்பரநாத், அடையப்பன் என்ற இரண்டு தமிழ் பிரமுகர்கள் இருந்தமையை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. இவர்கள் கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து டச்சுக்காரர்களின் கப்பலில் மதுரை சென்றதாக வரலாறு இயம்புகின்றது. ஒருபுறம் பஞ்சம், மறுபுறம் மேல்சாதியினர் மற்றும் அதிகார வர்க்கங்களிற்கிடையே பாக்குவெட்டியில் சிக்குண்ட பாக்குப்போல்  சிக்கித்தவித்த மக்கள் இன்றும் அதேநிலையில்தான் நசுக்கப்படுகின்றார்கள்.  தோட்டத் தமிழ் தொழிலாளிகள் வரவிற்கு முன்னும் பின்னும்  மலையகத் தமிழர்கள் வரலாறு தனி ஆய்வாக தொகுக்கப்பட்டு பதிவு செய்து பார்க்க வேண்டிய அவசியம் காலத்தின் கட்டளையாகும்.  

(Photos Credit pictorialrecord.blogspot.com) 


Sunday, February 28, 2021

   இலங்கையின் இனவன்முறை  வரலாறு – 3

   தொகுப்பு தேசமுகி

1875-1948 முதல் இலங்கைக் கொடி பிரித்தானியா இலங்கையின் கொடியும்  பௌத்த விகாரை யையும், யானையையுமே உள்ளடக்கியிருந்தது. பிரிட்டிஷ் காலத்திற்கு முன்னும் பின்னும் பௌத்த துறவற சமூகத்தின் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஆதிக்கங்களை தனியாக ஆய்வதன் மூலமே இதன் யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளமுடியும். மதம் என்பது ஒரு எளிய அமைப்பு அல்ல மாறாக பல சந்தர்ப்பங் களில் அதிகாரத்தின் வலுவான சக்தியாக விளங்கியது. பிரிட்டிஷ் காலனித்துவ காலங்க -ளின் பொழுது ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத் தையே ஆங்கிலேயர்கள் நிறுவிய பொழுதும், பௌத்தத்திற்கும் இலங்கை மக்களுக்கும் இடையிலான உறவை மதிப்பிட்டு பிரித்தாளும் பிரித்தானியாவின் தொலைநோக்குச் சூழ்ச்சி யின்  இராசதந்திரக் கொள்கையைத் தெளிவாகக் கடைப்பிடித்தது. இங்கு முக்கியமாக நாங்கள் கவனிக்க இருப்பது இலங்கையின் சுதந்திரத்தின் பின்னரான இனவெறி வன்முறை வரலாறு ஆகும். எனவே 1948-50 முதல் கொடி பின்னர்  1950-72 வரை கொடி மற்றும் 1972 முதல் இப்பொழுது பயன்படுத்தும் நவீன பதிப்பு வரை இவ்வாரம் பார்ப்போம். 

         சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று 1948 ஜனவரி 16 அன்று பாராளுமன்றத்தில் மட்டக்களப்புக்கான நாடாளுமன்ற உறுப்பினர் முதலியார் ஏ.சின்னலப்பை பரிந்துரைத்தார். சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.செனநாயக்க, பிப்ரவரி 4, 1948 அன்று நடந்த விழாவில் சிங்கக் கொடியை ஏற்றினார். இக்கொடியானது ஒரு மஞ்சள் சிங்கம் வலது கையில் ஒரு வாளைப் பிடித்து, கொடியை எதிர்கொண்டு, அடர் சிவப்பு பின்னணியில், மஞ்சள் நிற விளிம்புடன், நான்கு உச்சங்களுடன் நான்கு மூலைகளிலும் புத்த தாகபாவை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டு இருந்தது.               

   



     

இலங்கையில் உள்ள சிறுபான்மையினர் இந்த கொடி பெரும்பான்மை சிங்களவர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதாக உணர்ந்தனர். இந்த கேள்வியை ஆராய்ந்த ஒரு பாராளுமன்ற ஆணையம் தேசிய கொடிக் குழு மார்ச் 1948 இல் உருவாக்கப்பட்டது. இறுதியாக ஒரு புதிய கொடியை முன்மொழிந்தது.  மார்ச் 2, 1951 இல், நாட்டின் தேசியக் கொடியாக சில மாற்றங்களுடன் அதிகாரப்பூர்வமானது.  சிங்கக்; கொடியின் மஞ்சள் எல்லை இரண்டு செங்குத்து கோடுகளை சுற்றி உயர்த்தப்பட்டது, முஸ்லிம்களுக்கு பச்சை மற்றும் தமிழர்களுக்கு செம்மஞ்சள். இரண்டு செங்குத்து பட்டைகள் சேர்க்கப்பட்டது. இந்நேரத்திலும் கூட யூனியன் ஜக் கொடியானது ஓக்ரோபர் 29 1953 வரை இலங்கையில் தொடர்ந்து பறந்தது. இலங்கை 1948 முதல் 1952 வரை ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் முடியாட்சியின் கீழும், 1952 முதல் 1972 வரை இவரது மகளான இரண்டாவது எலிசபெத் மகராணியின் முடியாட்சியின் கீழும் இருந்தது. இறுதியாக 1972 ஆம் ஆண்டில், நாடு இலங்கை ஸ்ரீலங்காக் குடியரசாக மாறியது. அப்பொழுது, கொடி மீண்டும் ஒரு முறை மாற்றப்பட்டது, 

        மே 22, 1972 அன்று கொடியில் மேலும் மாற்றம் செய்யப்பட்டது. சிங்கத்தின் பின்னால் உள்ள அடர் சிவப்பு பகுதியின் மூலைகளில் கோயில்களின் உச்சியில் இருந்ததைப் போன்ற மஞ்சள் ஸ்பியர்ஸ் இருந்தன. இலங்கையில் பௌத்தம் கொண்டுள்ள செல்வாக்கைக் குறிப்பதற்கும், பௌத்தத்தின் நான்கு நற்பண்புகளான கருணை, இரக்கம், மகிழ்ச்சி மற்றும் சமத்துவம் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் அரசமரத்தின் நான்கு அழகிய இலைகள், பௌத்த சின்னமாக, நான்கு மூலைகளிலும் நான்கு உச்சங்களை மாற்றுவதற்காக சேர்க்கப்பட்டன. விளக்கங்களின்படி, கொடியில் உள்ள சிங்கம் சிங்கள இனத்தை குறிக்கிறது, சிங்கத்தின் வாள் நாட்டின் இறையாண்மையை குறிக்கிறது, சிங்கத்தின் வால் பௌத்தத்தின் உன்னதமான எட்டு மடங்கு பாதையை குறிக்கிறது. சிங்கத்தின் தலையில் சுருள் முடி மத அனுசரிப்பு, ஞானம் மற்றும் தியானம் ஆகியவற்றைக் குறிக்கிறது, தாடி வார்த்தைகளின் தூய்மையைக் குறிக்கிறது, வாளின் கைப்பிடி நீர், நெருப்பு, காற்று மற்றும் பூமியின் கூறுகளை எடுத்துக்காட்டுகிறது, மூக்கு புத்திசாலித்தனத்தைக் குறிக்கிறது, இரண்டு முன் பாதங்கள் தூய்மையைக் குறிக்கின்றன. செப்டம்பர் 7, 1978 அன்று இலங்கையின் கொடியின்இலைகள் இயற்கையாக அமையும் வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டன.













2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பச்சை மற்றும் செம்மஞ்சள்; இரண்டு செங்குத்து கோடுகள் இல்லாத தேசியக் கொடியின் மாற்றப்பட்ட பதிப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரை ஆதரிக்கும் பல எதிர்ப்பாளர்களால் பாராளுமன்றத்தின் முன்னும், லஞ்ச ஆணையத்திற்கு வெளியேயும் பயன்படுத்தப்பட்டது. இலங்கையின் அரசியலமைப்பில் கொடி தேசியக் கொடிக்கு முரணாக இருப்பதால், தேசியக் கொடிக்கு பதிலாக மாற்றப்பட்ட கொடியைக் காண்பிப்பது பல சர்ச்சையை உருவாக்கியது. போராட்டக்காரர்களில் சர்ச்சைக்குரிய கொடியை அசைக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) இருந்தனர். இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறி இருந்தது. இதன் பின்ணணியில் ராஜபக்ச சகோதரர்கள் கைவண்ணம் இருந்தது. முரண்பாட்டிற்குரிய இந்த தேசியக்கொடி விவகாரம் சட்டப்படி குற்றம், ஆயினும் எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மைத்திரி, ரணில் அரசாங்கமும் கண்டும் காணாமல் கடந்து சென்றது. 

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, சுதந்திரத்திற்கான பொது அழுத்தம் அதிகரித்தது. பிரிட்டிஷ் ஆளும் இலங்கை காலனி 1948 பிப்ரவரி 4 அன்று சுதந்திரம் அடைந்தது, திருத்தப்பட்ட அரசியலமைப்பு அதே தேதியில் நடைமுறைக்கு வந்தது. இலங்கை சுதந்திரச் சட்டம் 1947 இன் கீழ் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்துடனான இராணுவ ஒப்பந்தங்கள் நாட்டில் அப்படியே பிரிட்டிஷ் வான் மற்றும் கடல் தளங்களை பாதுகாத்தன் சிலோன் இராணுவத்தின் உயர் பதவிகளில் பெரும்பாலானவர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் தொடர்ந்து நிரப்பினர். டான் சேனநாயக்க இலங்கையின் முதல் பிரதமரான பின்னர் 1948 இல், இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக விண்ணப்பித்தபோது, சோவியத் யூனியன் விண்ணப்பத்தை வீட்டோ செய்தது. இலங்கை பெயரளவில் மட்டுமே சுதந்திரமானது என்று சோவியத் யூனியன் நம்பியது. சுதந்திரத்தின் பின்னரும் வெள்ளையர்கள், படித்த உயரடுக்கினர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாலும் ஆங்கிலேயர்கள் அதன் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். 1948ல் டி.எஸ்.சேனநாயக்க எடுத்த தீர்மானமான முடிவெடுத்து  1949ஆம் ஆண்டில், இலங்கைத் தமிழர்களின் தலைவர்களின் ஒப்புதலுடன், யூ.என்.பி அரசாங்கம் இந்திய தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் வாக்களிப்பு உரிமையை ரத்து செய்தது. (தொடரும்)



Saturday, February 27, 2021

  இலங்கையின் இனவன்முறை  வரலாறு – 2

தொகுப்பு தேசமுகி

வரலாற்றில் கிறிஸ்தவர்களாக இருந்த சிங்களத் தலைவர்கள் அனைவரும் பௌத்தப் பேரினவாதத்தையே ஆதரித்தனர், அல்லது முன்னிறுத்தினர் என்பதனையும், தமிழ்த் தலைவர்களோ தமிழர்கள் என்பதற்கு முன் இலங்கையர்கள் நாம் என்று செயல்பட்டதையும்   நாம் வரலாற்றை உன்னிப்பாக உற்றுக் கவனிப்பதன் மூலம் கண்டுகொள்ளலாம். 

பிரிட்டிஷ் சிலோன் (1796-1900)

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இலங்கையை கைப்பற்றியது, ஆங்கிலேயர்களால் இலங்கை சிலோன்  என்று அழைக்கப்பட்டது.  இது பிரெஞ்சு புரட்சியின் (1792-1801) போர்களின் போது நிகழ்ந்தது. அந்நேரம்  நெதர்லாந்து பிரெஞ்சு கட்டுப்பாட்டின் கீழ் வந்தபோது, ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லத் தொடங்கினர். டச்சுக்காரர்கள், அரை மனதுடன் எதிர்ப்பின் பின்னர், 1796 இல் இலங்கைத் தீவில் சரணடைந்தனர். ஆங்கிலேயர்கள் இவ்வெற்றியை தற்காலிகமாக நினைத்து, தென்னிந்தியாவில் மெட்ராஸில் (சென்னை) இருந்து இலங்கைத் தீவை நிர்வகித்தனர். எவ்வாறாயினும், பிரான்சுடனான யுத்தம் இலங்கையின் மூலோபாய மதிப்பை வெளிப்படுத்தியது, இதன் விளைவாக ஆங்கிலேயர்கள் தீவில் தங்கள் பிடியை நிரந்தரமாக்க முடிவு செய்தனர். 1802 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு முடிக்குரிய (கிரீடக் காலனி) காலனியாக மாற்றப்பட்டது, மேலும் பிரான்சுடனான அமியன்ஸ் வுசநயவல ழக யுஅநைளெ உடன்படிக்கையால், கடல்சார் இலங்கை பிரிட்டிஷ் வசம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் பயன்படுத்திய யூனியன் கொடியே சுதந்திரம் பெறும் வரை பிரிட்டிஷ் இலங்கையின் தேசியக் கொடியாக விளங்கியது.

     சிங்கக்கொடி எப்படி இலங்கையின் தேசியக் கொடியானது எனும் வரலாறானது 1875-1948 முதல் இலங்கைக் கொடி மற்றும் 1948-50 முதல் கொடி பின்னர்  1950-72 வரை கொடி மற்றும் 1972 முதல் இப்பொழுது பயன்படுத்தும் நவீன பதிப்பு என விரிவடையும். இலங்கைத் தேசியக் கொடியின் பின்ணணி பற்றி பார்க்கையில் கவனிக்க வேண்டிய முக்கியமான சிங்களத் தலைவர்களில் ஒருவர் ஈ.டபிள்யூ. பெரோரா. 

ஈ.டபிள்யூ. பெரேரா

1875 ஆம் ஆண்டு டிசம்பர் 11


ஆம் தேதி காலியின் உனவதுனாவில், கொழும்பின் ப்ரொக்டர் எட்வர்ட் பிரான்சிஸ் பெரேரா மற்றும் காலியின் தல்பத்துவாவைச் சேர்ந்த முதலியார் வில்லியம் டேவிட் பெரேரா ஜெயவிக்ரேமா செனவிரத்னாவின் மகள் ஜோஹானா மாடில்டா ஆகியோருக்கு பிறந்தார். அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவராக வளர்க்கப்பட்ட பெரேரா, கொழும்பின் ராயல் கல்லூரியில் கல்வி பயின்றார் மற்றும் ராயல் கல்லூரி இதழின் முதல் ஆசிரியராக இருந்தார். இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்கும் போது எக்ஸாமினர் செய்தித்தாளின் துணை ஆசிரியராக பணியாற்றிய அவர், மே 1900 இல் வழக்கறிஞராக அழைக்கப்பட்டார். மத்திய கோவிலில் மேலதிக படிப்புகளுக்காக இங்கிலாந்து சென்ற அவர் 1909 இல் ஒரு பாரிஸ்டர் ஆனார் பெரேரா 1910 இல் முதல் சீர்திருத்த பிரதிநிதியின் உறுப்பினராக இருந்தார்.

சுதந்திர இயக்கத்தில் இவரது பங்கு

முதலாம் உலகப் போரின்போது, 1915 ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கொழும்பில் வணிக இனப்போட்டி வெடித்தது, கிறிஸ்தவர்கள் பௌத்தர்களைப் போலவே பங்கேற்றனர். எழுச்சிக்கு பயந்து, இலங்கையின் அனுபவமற்ற பிரிட்டிஷ் காலனித்துவ ஆளுநர் சர் ராபர்ட் சால்மர்ஸ் 1915 ஜூன் 2 அன்று இராணுவச் சட்டத்தை அறிவித்தார், மேலும் பொலிஸ் மா அதிபர் ஹெர்பர்ட் டவுபிகின் ஆலோசனையின் பேரில் சிங்கள சமூகத்தை கொடூரமாக அடக்கத் தொடங்கினார். விசாரணையின்றி அவர்கள் கலகக்காரர் என்று கருதிய யாவரும், இவ் வழியில் கொல்லப்பட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை சான்றுகள் இல்லை ஆயினும்   ஆயிரக்கணக்கு மேல் எனக்  கூறப்படுகிறது. டி.எஸ்.செனநாயக்க, டி.ஆர்.விஜேவர்தன, ஆர்தர் வி. டயஸ், டாக்டர் காசியஸ் பெரேரா, டாக்டர் டபிள்யூ. ஏ சில்வா, எஃப்.ஆர் டயஸ் பண்டாரநாயக்க, எச். எம். அமரசுரியா, ஏ.எச். மொலமுரே சிறையில் அடைக்கப்பட்டார்கள் மற்றும் கேப்டன் டி.இ.ஹென்ரி பெட்ரிஸ், ஒரு போராளி தளபதி, கலகத்திற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்.

சேர் பொன்னம்பலம் ராமநாதனின் பங்கேற்புடன் சர் ஜேம்ஸ் பீரிஸால் தொடங்கப்பட்ட ஈ.டபிள்யூ. பெரேராவின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு இரகசிய கூட்டத்தில் ஒரு குறிப்பாணை தயாரிக்கப்பட்டது. அதை அவர் கம்பீரமாக அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு முன், பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைகளின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது. அந்நேரம் ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல்களினால் கடல் பயணம் ஆபத்தானது, அவை கப்பல்களைத் தாக்கி அழித்தன. பாரில் ஒரு நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை கைவிட்டு, ஈ. டபிள்யூ. பெரேரா பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் சில ஆராய்ச்சி செய்யப் போவதாகக் கூறி அனுமதி பெற்று இங்கிலாந்துக்குச் செல்லும் பணியை மேற்கொண்டார். அவருக்கு சாதகமாக, ஆங்கிலேயர்கள் அவரை ஒரு தேசிய தேசபக்தராக இல்லாமல் ஒரு அறிவார்ந்த கிறிஸ்தவ பேரறிஞராக கருதினர். அவருடன் ஜார்ஜ் ஈ. டி சில்வாவும் இருந்தார். இங்கிலாந்தில், சர் பொன்னம்பலம் ராமநாதன் மற்றும் பின்னர் பெரோராவின் பணி வெற்றிகரமாக இருந்தது. தடுப்புக்காவலில் இருந்த தலைவர்களை விடுவிக்க பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது. பல உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஒரு புதிய ஆளுநர், சர் ஜான் ஆண்டர்சன், சர் ராபர்ட் சால்மர்ஸ{க்குப் பதிலாக அவரது மாட்சிமை அரசாங்கத்திடம் விசாரித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தல்களுடன் அனுப்பப்பட்டார். ஈ. டபிள்யூ. பெரேராவின் முயற்சி பெரிதும் பாராட்டப்பட்டது, இதன் பின்னர் அவர் கோட்டையின் சிங்கம் என்று அழைக்கப்பட்டார்.

          ஈ.டபிள்யூ. பெரேரா, டி.ஆர்.விஜேவர்தனவுடன் சேர்ந்து, இலங்கையின் கடைசி மன்னரின் பதாகையை வெற்றிகரமாக கண்டுபிடித்தார். இது பின்னர் இலங்கையின் டொமினியனின் கொடியாக மாறியது. 

ரணில் விக்ரமசிங்கவின் பேரனார்; டி.ஆர்.விஜேவர்தனாவின் நிதி உதவியுடன், கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னரான சிறீ விக்ரம ராஜசிங்கவின் பதாகையின்; இருப்பிடத்தை கண்டுபிடித்தார். பிப்ரவரி 1815 இல் கண்டியன் இராச்சியம் சரிந்தபோது கொடி பிரிட்டிஷாரால் எடுக்கப்பட்டு, ராயல் மருத்துவமனை செல்சியாவில் வைக்கப்பட்டிருந்தது. இங்கிருந்தே பதாகை  மீட்கப்பட்டது. இது தேசியக் கொடியாக இருந்ததா அல்லது கண்டிய மன்னர்களின் கொடியாக இருந்ததா என்பது சர்ச்சைக்குரிய ஒரு விடயம்.  இப்பதாகை சுதந்திர இயக்கத்தில் ஒரு மைய புள்ளியாக மாறியது, மேலும் இது 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் டி.எஸ். சேனநாயக்க ஆட்சியில் இலங்கை டொமினியனின் கொடியாக மாறியது.  





Saturday, February 20, 2021

 இலங்கையின் இனவன்முறை  வரலாறு 1

தொகுப்பு தேசமுகி

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது. கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினரான முஸ்லிம்கள். இக் கலவரம் 1915, மே 29 ஆம் நாள் ஆரம்பமாகி 1915 யூூன் 5 இல் முடிவுக்கு வந்தது. கலவரம் நிறுத்தப்பட்ட நேரத்தில், ஒன்பது நாட்களில் 4,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம் கடைகள் சூறையாடப்பட்டு 17 மசூதிகள் எரிக்கப்பட்டன. முஸ்லீம்கள் வந்தேறு குடிகள் எனும் பொருள் கொண்ட “மரக்கல மினிசு” (கள்ளத்தோணிகள்) என்றே தாக்கப்பட்டனர். 

வரலாற்றை விமர்சன ரீதியாக ஆராய்வது நிகழ்காலத்திற்கான மதிப்புமிக்க படிப்பினைகளை வெளிப்படுத்த முடியும் என்று வரலாற்றாசிரியர்கள் வாதிடுகின்றனர். அதனடிப்படையில் முஸ்லீம்கள் மார்க்க ரீதியாக முஸ்லீம்களாக இருந்தாலும் அவர்கள் தமிழ் பேசும் தமிழர்களே.  எனவே இலங்கைத் தமிழர்கள் மீதான இனவழிப்பையும் 1915 இல் இருந்தே உற்றுநோக்கி சூட்சும நிகழ்ச்சி நிரல் பின்னணிகளை ஆய்வு செய்யவேண்டும். 

1915 ஆண்டு மே மாதம், வெசாக் பெரஹராவின் போது கண்டியில் ஒரு மசூதிக்கு வெளியே நடந்த சண்டையைத் தொடர்ந்து, தீவு முழுவதும் பரவிய முஸ்லீம் எதிர்ப்பு வன்முறை அலைகளில் கும்பல் 25 பேரைக் கொன்றது, நான்கு பேரை பாலியல் பலாத்காரம் செய்தது, பல முஸ்லீம்களின் வணிக நிறுவனங்களையும் சூறையாடியது. 189 பேர் காயமடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் இராணுவச் சட்டத்தை அறிவித்தது, அதன் இராணுவமும் காவல்துறையும் குறைந்தது 63 பேரைக் கொன்றனர். ஆங்கில தன்னார்வலர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றவர்கள், அரசின் மறைமுக ஒப்புதலுடன் மக்களை வெளிப்படையாக சுட்டுக் கொன்ற பதிவுகளும் உள்ளன.

1915 இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இன்றைய தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்பின் நாயகர்கள் இங்கிருந்துதான் உருவாகினார்கள். 1915 சிங்கள-முஸ்லீம் கலவரங்களின் அரசியல் கொந்தளிப்பின் முன் யாரென்றே தெரியாது பெயரற்று இருந்த சிலர் தங்களை இனவெறி மணிகள் மற்றும் விசில்களால் அலங்கரித்து வரலாற்றில் வில்லன்களாக அறிமுகமாகி பௌத்த சிங்கள கதாநாயகர்கள் ஆனார்கள். பௌத்த சிங்களவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவினரைத் தூண்டித் தாக்குதல்களை மேற்கொண்டனர்.  ஆயினும் கலவரத்திற்குத் திட்டமிட்ட இவர்கள் கிறிஸ்தவ பாரம்பரியத்தை சேர்ந்தவர்களாகவே பெரும்பாலும் காணப்பட்டனர். எது எவ்வாறு இருப்பினும்; கையில் எடுத்த ஆயுதம் சிங்கள பௌத்த பேரினவாதமே! இத்தகைய முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவரே சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டொன் ஸ்ரீபன் சேனநாயக்க (20 ஒக்ரோபர் 1884- 22 மார்ச் 1952). வரலாற்றில் இவர் ஒரு மரண தண்டனைக்; கைதி. 

1915 நடைபெற்ற சிங்கள-முஸ்லிம் கலவரத்தினைத் தொடர்ந்து ஆங்கிலேயே அரசு தீவிரமாகச் செயற்பட்டு டீ.எஸ்.சேனானாயக்கா, ஆர்.டயஸ் பண்டாரநாயக்கா, டீ.எஸ்.விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ.டீ. த.சில்வா, எச்.அமரசூரிய, ஏ.எச்.மொலமூறே போன்ற பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கிய காரணமான அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.  இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, இங்கிலாந்து சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி அச்சிங்களத் தலைவர்களை விடுவித்தார். இப் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், பொன்.இராமநாதன் நாடு திரும்பியபோது காலிமுகத்திடலில் தங்கள் தோள்களில் அவரைச் சுமந்து வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர். அதேவேளை இலங்கைத் தமிழ் தலைவராக இருந்த பொன்.இராமநாதன், சிங்களவர்களுக்கு சார்பான செயற்பாடுகளில் ஈடுபட்டமையே தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட ஒரு காரணமாக அமைந்தது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அதுமட்டுமன்றி ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் தங்களை முதலில் இலங்கையர்கள் என்றும் பின்னர் தமிழர்கள் என்று கருதியவர்களாகவும் செயற்பட்டனர் என்றும் ஆய்வாளர்கள் கருத்துக்கள் கூறுகின்றன. 

இவ்வாறு மரண தண்டனைக் கைதியாக இருந்து இராமநாதன் அவர்களால் காப்பாற்றப்பட்ட டி.எஸ்.சேனநாயக்க 1929 இல் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் ஓர் உறுப்பினரானார். 1931 அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை, காணி அமைச்சரானார். வேளாண் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946 இல் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சேர் பட்டத்தை ஏற்க மறுதலித்தார்.  எனினும் பிரித்தானியருடன் நல்லுறவை விரும்பினார். 1947 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948 பெப்ரவரி 4ல் பிரித்தானியக ஆதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். 

இலங்கை சுதந்திரம் பெறு முன்னரே சட்ட அவையில் காணி, வேளாண்மை அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா கிழக்கில் காணி மேம்பாடு என்ற போர்வையில் பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களைத் தொடக்கி அவற்றில் தென்னிலங்கையில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்களை ஆயிரக்கணக்கில் குடியேற்றினார். வேளாண்மை காணி அமைச்சராக விவசாயம், காணி அபிவிருத்தித்தித் திட்டம் என்ற போர்வையில்  தமிழர்தாயகப் பகுதியில் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை திட்டமிட்டு உருவாக்கி இனவழிப்பின் மறைமுகச் சூத்திரதாரியாக இந்த இனவெறி அரசியல்வாதி விளங்கினார். 1948 இல் டி.எஸ்.சேனநாயக்கா தனது மகன் டட்லி செல்ரன் சேனநாயக்காவை காணி, அமைச்சராக நியமித்து கல்லோயா திட்டத்தினைத் தொடங்கி  சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தும் நடைபெற வழிகோலினார்.  இதே ஐக்கிய தேசியக் கட்சியில் சுகாதார மற்றும் உள்ளாட்சி அமைச்சராக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அங்கம் வகித்தார். கண்டியில் கோயில் பூசாரி நீலப்பெருமாள் பண்டாரம் வழிவந்த இவர்கள் பண்டாரநாயக்கா எனும் பெயர் கொண்ட சிங்களரான கதையைத் தனியாகப் பார்ப்போம். 

டி.எஸ்.சேனநாயக்கா பௌத்தராக குறிப்பிட்டிருந்தாலும் இவர் பெற்றோரின் பெயரும் வழிபாடும் இவர் பிறப்பிலேயே கிறிஸ்தவராகவே இருந்ததைத் தெரிவிக்கின்றன. இறப்பர் தோட்ட முதலாளியான முதலியார் டொன் ஸ்பேற்றர் சேனநாயக்க மற்றும் டோனா கேத்தரினா எலிசபெத் பெரேரா சேனாநாயக்க இவரது பெற்றோர்கள் ஆவார். முதலில் பௌத்தர்களாகவும் அரசியல்-வியாபாரத் தேவைகளுக்காக கிறிஸ்தவர்களாகவும், பின்னர் பௌத்தர்களாகவும் தம்மைக் காட்டிக் கொண்டவர்கள் என்றால் மிகையாகாது. 

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா குதிரைச் சவாரியின் போது விழுந்து காயமடைந்து 1952, மார்ச் 22 இல் இறக்கவே, மார்ச் 26 இல் டி.எஸ்.சேனநாயக்காவின் மூத்த மகன் டட்லி செல்ரன் சேனாநாயக்கா (19 யூன் 1911 – 13 ஏப்ரல் 1973) இலங்கைப் பிரதமராக இலங்கை ஆளுநர் சோல்பரி பிரபுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



 (தொடரும்)