Sunday, May 23, 2010

Petition Against Harmonized Sales Tax in Ontario

Pic 1

Welcome

Thank you for visiting and please don't forget to sign the petition against Harmonized Sales Tax (HST) in Ontario.

please sign here

Sign the Petition Against Harmonized Sales Tax in Ontario

Total Signatures to Date = 37443

First Name:
Last Name:
Email:
Please use your real e-mail address*

*Please use a real e-mail address to confirm your signature. Your e-mail address is confidential and not accessable or sold to anyone.

Thursday, May 20, 2010

A9 Memories.com

மனிதாபிமான உதவியைக் கோரி நிற்கும் இந்த சுரேஸ் யார்? இது ஒரு நீதிகேட்கும் போராட்டம்!உண்மை வெல்ல வேண்டுமெனில் நாம் உண்மையை உண்மையில் புரிந்து கொள்ள வேண்டும்!உண்மையை உண்மையில் புரிந்து கொண்டு உறவுக்குக் கரம் கொடுப்போம்!உரிமைத் தோள் கொடுப்போம்!தர்மம் வெல்ல நாமும் பங்களிப்போம்!

www.a9memories.com

நீதி கேட்டுப் போராடும் சுரேஷிற்கு உதவுங்கள்

எமது அன்பிற்குரிய ஈழத்து உறவுகளே,

இந்த வேண்டுகோள் மனிதாபிமான உதவி கேட்டு வரையப்படுகிறது. இதைப் படித்த பின்னர் சுரேஷ் யார்? அவருக்கு என்ன உதவி வேண்டும்? என்பதைப் புரிந்துகொள்வீர்கள் எனநம்புகிறோம்.

கல்வியில் சாதனை

சுரேஷ் ஈழத்திலிருந்து ஒன்பதாவது அகவையில் கனடாவுக்கு அகதியாக வந்தவர். புலம்பெயர் நாட்டில் மிகுந்த அக்கறையோடு படித்துப் பல்கலைக் கழகம் புகுந்தார். பள்ளிகளில்படிக்கும் போது புலமைப் பரிசில்களையும் விருதுகளையும் பெற்றார். இக்காலத்தில் அவர் ஒரு கெட்டிக்கார மாணவன் என்று பெயர் எடுத்ததோடு சமூக அக்கறை கொண்டமாணவனாகவும் விளங்கினார். இவரது அறிவுத்தேடலும் அயராத முயற்சியும் இவரைத் தனது பதினெட்டாவது அகவையிலேயே ஓர் கணனி நிறுவனத்திற்குச் சொந்தக்காரராக்கியது.சுரேஷ் 2006 ஆம் ஆண்டு Waterloo பலகலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியல் துறையில் (Electrical Engineering) இளமானிப் பட்டத்தையும், 2008 இல் கலைத்துறையில் இளமானிப்பட்டத்தையும் (Bachelor of Arts), Waterloo Wilfrid Laurier பல்கலைக் கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தையும் (MBA) பெற்றார். பின்னர் Microsoft, Amazon, NVIDIA, RIM போன்றபுகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலங்களில் Microsoft நிறுவனத்திற்காக மாணவர்களை தெரிவு செய்யும் பொறுப்பும், பணியும் கூடஇவரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஈழச் சிறுவர் சிறுமிகளுக்கு உதவி

2004 ஆம் ஆண்டில் ஈழம் செல்லும் வாய்ப்பு சுரேஷிற்குக் கிட்டியது. அங்கு போரினால் ஏதிலிகளாக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் வலிகளை செந்தளிர் இல்லத்தில் கண்கூடாகக் கண்டார்.அந்தக் காட்சிகள் அவர் மனதை மிகவும் பாதித்தது. புலம் பெயர்ந்த மண்ணில் தனக்குக் கிடைத்த கணணிக் கல்வி தாயகத்திலுள்ள இளம் சமுதாயமும் பெற்று வாழ்வில் உயரவேண்டும்என்று ஆசைப்பட்டார். மேலை நாடுகளுக்கு நிகரான அறிவாற்றலோடு ஈழத்தமிழ் சமுதாயமும் வளரத் தன்னாலான உதவிகளைச் செய்ய வேண்டுமென்று உறுதி பூண்டார்.வன்னியிலுள்ள VanniTech என்ற நிறுவனத்திற்கு தன் துறைசார் அறிவையும் கணணிகளையும் கொடுத்து உதவினார். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்திசெய்யும் (Solar Panel System)முறைக்கு தன்னாலான உதவியை செய்தார். மீண்டும், 2004 வது ஆண்டு மார்கழியில் தாயகம் சென்ற வேளையில் பல ஆயிரம் உயிர்களைப் பலிகொண்ட ஆழிப்பேரலையின் அனர்த்தங்கள்அவருக்கு நேரடி அனுபவமானது. தான் மிகவும் நேசித்த செந்தளிர் இல்லச் சிறார்கள் பலரின் உயிரற்ற உடல்கள் அவரது மனதை மிகவும் பாதித்தது. ஆழிப்பேரலை ஏற்படுத்திய பொருள்அழிவுகள் அத்தனையையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடு இங்கு வந்து ஈழத்தில் பொதுமக்கள் படும் இன்னல்களை மாணவர்களுக்கு விளக்கினார். அவர்களைஒன்றிணைத்து தன்னாலான பல உதவிகளை செய்தார். அந்தக் காலகட்டத்தில் தான் இவர் வாழ்வில் எதிர்பாராத ஓர் விபத்து ஏற்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

21. 08. 2006 இல் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க கனேடிய காவல் துறையினர் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் சுரேஷை கனடாவில் கைதுசெய்தார்கள். தடை செய்யப்பட்ட ஓர் பயங்கரவாத் அமைப்புக்கு (தமிழீழ விடுதலைப் புலிகள்) உதவினார் என்பதே அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். கூடவே, கணனி போன்றஉபகரணங்களை வாங்கிச்சென்று யாருக்கு வழங்கினார் என்பது தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சோகம் என்னவென்றால் அவர்கள் குறிப்பிடும்காலப்பகுதியில் கனடாவிலோ, இலங்கையிலோ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தும் கனடாவில் இவரது பிணை மனுவை விசாரணைக்குஎடுத்த நீதிபதி இவரது நன்னடத்தையையும் கல்வித்தகமைகளையும் கவனத்தில் கொண்டு இவரைப் பிணையில் வெளியே செல்ல அனுமதித்தார். பிணையில் வெளியே வந்த சுரேஷ்தன்னை அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதை எதிர்த்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார். இதன் விளைவாக வேலைவாய்ப்புகள் ஏதுமின்றி பொருளாதார நெருக்கடிக்குள்தள்ளப்பட்டிருக்கிறார். வழக்குச் செலவுகளைப் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அவரது குடும்பமும் நல்ல உள்ளம் படைத்த சில நண்பர்களும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நெருக்கடியான சூழ்நிலைக்குள்ளும் தனது கல்வியைத் தொடர்ந்து தனது BA மற்றும் MBA பட்டப்படிப்பை 2008 ம் ஆண்டு படித்து முடித்தார். பல்கலைக்கழகம் அவரது திறமைக்கு மதிப்புகொடுத்து 2010 முதல் வணிகமுகாமைத்துவ மாணவர்களுக்கு (MBA Students) விரிவுரையாளராக அமர்த்தியது.

சுரேஷிற்கு எதிரான வழக்கு அடிப்படையில் இரண்டு நோக்கங்களை கொண்டுள்ளது. ஒன்று சுரேஷ் போன்ற இளைஞர்கள் தாயகத்திற்கு செய்யும் கல்வி மற்றும் சமூகத் தொண்டினைமுடக்குவது. இருண்டு இவரைப்போன்ற ஆர்வமிக்க தமிழ் இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் செயற்பாடுகளுக்குத் தடை போடுவது. ஆகவே, சுரேஷ் போன்ற சமூக அக்கறை கொண்ட ஓர் இளைஞன் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படவேண்டும். சுரேஷ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டால் தடைசெய்யப்பட்ட ஓர்இயக்கத்திற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறைந்தது 25 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்க அமெரிக்க சட்டத்தில் இடமிருக்கிறது.

எமது அன்பான உறவுகளே,

இந்த வழக்கின் வெற்றி என்பது புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழ் சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள அச்ச உணர்வைக் களைந்து புதியதோர் நம்பிக்கையைத் தரும் வெற்றியாகஇருக்கும். அந்த வெற்றிக்கு உங்களின் அன்பான உதவியையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். பண உதவி செய்ய விரும்புவோர் தயவு செய்து கீழேயுள்ள www.justice for suresh. org என்ற தொடர்பை அழுத்தி உதவுங்கள். அல்லது Pay Pal (Credit Card) மூலமாகவும் Certified Cheque மூலமாகவும் உதவலாம். கனடாவில் உள்ளவர்கள் விரும்பினால் Personal Chequeகொடுக்கலாம். உங்கள் காசோலைகளை அனுப்பவேண்டிய முகவரி,

Justice for Suresh

38064- 256 King St. North, Waterloo, ON, N2J 2Y9 Canada

Justice for Suresh என்ற அமைப்பினூடாக வழங்கப்படும் பண உதவி சட்டரீதியானது. இந்த வங்கிக் கணக்கை நிர்வகிக்க பல்கலைக்கழக பொறுப்பாளர் ஒருவரும் சமூக சேவையாளர்ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மட்டுமே இப்பணத்தைக் கையாளமுடியும் என்பதையும் சுரேஷிற்கு எதிரான வழக்கைத் தவிர வேறெந்தத் தேவைகளுக்கும் இப்பணத்தைப்பயன்படுத்த முடியாது என்பதையும் உறதிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். சுரேஷிற்குத் தாமதிக்காமல் உங்களால் முடிந்த பொருள் உதவியை செய்யுமாறு பணிவன்புடன்வேண்டுகிறோம்! நன்றி.


A9 Memories.com

Tuesday, May 18, 2010

காலம் கனியும் என்றிருப்பதைவிட காலத்தைக் கனிய வைக்க வேண்டும் !




காலம் கனியும் என்றிருப்பதைவிட காலத்தைக் கனிய வைக்க வேணடும்

காலந்தாழ்த்தினால் கண்ணீர் விட்டு கதறியழ வேண்டிய நிலை ஏற்படும்

மா.க. ஈழவேந்தன், முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

நாடுகடந்த தமிழீழ அரசின் கனடாப் பேராளர்

நாளுக்கு நாள் சாகடிக்கப்படுவதென்பதைவிட நிமிடத்திற்கு நிமிடம் ஈழத்தமிழினம் வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழீழத்தில் மடடுமல்ல இலங்கையின் சிங்களப்பகுதிகளிலும் சீரழிக்கப்படுகின்றோம். ஓவ்வொருமுறையும் சிங்கள அரசால் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை நடாத்தப்படும் போதும் திருமலை, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, வன்னி, யாழ்ப்பாணம் என தமிழீழத்தின் வௌ;வேறு பகுதிகளில் தமிழராகிய நாம்தஞ்சம் புகுந்து ஆறுதல்காண முயன்றோம்.


1958ல் ஏற்பட்ட இனப்படுகொலையை அடுத்து மறைந்தும் மறையாத எம் வன்னியசிங்கம் அவர்கள் என்னைப்பக்கத்தில் வைத்துக்கொண்டு கூறிய அறிவுரையில்


“ கப்பலோட்டிய தமிழன் இப்போது கப்பலில் ஓட்டப்படுகின்றான், தமிழீழத்தின் வௌ;வேறு பகுதிகளில் வாழ முயல்கின்றான் விரைவில் நம் மண்ணிலேயே நாம் வாழமுடியாத நிலை ஏற்படக்கூடும் ஏனெனில் அந்தளவுக்கு சிங்கள அரசின் வெறியாட்டம் தலைதூக்கி நிற்கின்றது இந்நிலை தொடருமானால் இந்துமா சமுத்திரம் எங்களை இறுக அணைக்கும் நிலை ஏற்படும்.” என்றார், 1958ல் இவ்வாறு எச்சரித்த வன்னியசிங்கம் அவர்கள் 1959 ளுநி 17ல் எம்மைவிட்டுப் பிரிந்தார்.


1956ல் தனிச்சிங்களச்சட்டத்தை எதிர்த்து காலிமுகத்திடலில் தந்தை செல்வா, னுச நுஆஏ நாகநாதன், கூ. வன்னியசிங்கம், தமிழால் உலகாண்ட தனிநாயகம் அடிகளார் உள்ளிட்டோர் அறவழிப்போராட்டம் நடாத்திய போது நாம் மிகக் கடுமையான தாக்குதலுக்குள்ளானோம். இந்தத் தாக்குதல் இலங்கை முழுவதும் பரவியது மறக்க முடியாத நிகழ்வாகும். இதன் பின்னர் 1958ல் தமிழருக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்பு வெறியாட்டம் ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது பாணந்துறை கந்தசாமி கோயில் குருக்கள் கப்போடு கட்டிவைக்கப்பட்டு பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டதும், கற்பிணிப் பெண்கள் கருவறுக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதும் நெஞ்சைவிட்டு நீங்காத நிகழ்வுகளாகும். ஏரிக்கரைச் செய்தியிதழில் பணியாற்றிய தாசி வித்தாச்சி எழுதிய“அவசரகாலச் சட்டம் 1958”என்ற நூலில் தந்துள்ள விபரங்கள் 52 ஆண்டுகளுக்கு முன்பே ஈழத்தமிழர் எதிர்நோக்கி நிற்கும் ஆபத்தினை வெளிப்படையாக உணர்த்தியுள்ளது.


1954ல் பிறந்து தமிழினத்தின் தேசியத் தலைவராக உயர்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 1958ல் வயது நான்கு தந்தையின் மடியிலிருந்தவாறே தமிழர்படும் துயரங்களை செவிமடுத்ததனால் ஏற்படுத்தப்பட்ட மனத்தாக்கமே பின்னாளில் ஒரு மாபெரும் விடுதலை இயக்கத்தை வழிநடத்தினார்.


1961ல் அன்றைய கச்சேரிகள் இன்றைய செயலகங்களுக்கு முன்னால் தமிழீழப் பகுதிகளில் சிங்களமொழித் திணிப்பிற்கு எதிராக அறவழியில் நாம் நடாத்திய போரட்டங்களிற்கு இரத்தம் பீறிட எங்கள் தலைவர்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட அனைத்துதரப்பினரும் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்டோம். இத்தகைய சிங்கள இனவெறியாட்டம் 1965லும் 1968லும் சிறியளவில் தொடர்ந்து தாக்கப்பட்டோம். பின்னர் 1977ல் இலங்கையின் தென்பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும் தமிழீழப் பகுதிகளில தஞ்சம் புகுந்தோம். பின்பு 1979ல் நான் உட்பட பல தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்காளானோம். உயிர்களும் பறிக்கப்பட்டன.


பின்பு 1981ல் தென்னாசியாவின் தலைசிறந்த நூலகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாண நூல் நிலையம் இலங்கை அரசில் அமைச்சராக பதவி வகித்த சிறில் மத்யூ, காமினி திசாநாயக்கா போன்றோர் முன்னிலையில் தீக்கிரையாக்கப்பட்டது. ஈழநாடு ஊடக அலுவலகம், தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகம், யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இல்லம், வியாபார நிறுவனங்களும் தீயிடப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர், முசோலினி போன்ற வெறிகொண்ட தலைவாகளோடு அணிசேரா நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மருத்துவமனைகள், பாடசாலைகள், கோயில்கள் தாக்கக்கூடாது என ஒரு பண்பான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இனவெறியர்கள் ஹிட்லர், முசோலினியை விஞ்சுமளவுக்கு துசு ஜெயவர்த்தனா அவர்களின் இனவெறி இருந்ததால் மேற்குறிப்பிட்ட பேரளிவுகள் எமக்கேற்பட்டது. இந்நூலகம் எப்படி எரிக்கப்பட்டது என ஊடகவியலாளர்கள் துசு. ஜெயவர்த்தனாவை வினாவியபோது “யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீதுள்ள கோபம் காரணமாக இருக்கலாம் என” குதர்க்கமான பதிலளித்தார்.


பின்பு இவை அனைத்தையும் மிஞ்சுமளவிற்கு ஏற்பட்ட இனக்கலவரம் இலங்கையின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்களை மட்டுமல்ல தமிழீழப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் கூட உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதமற்ற நிலையில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ஏதிலிகளாகத் தஞ்சம் புகுந்தனர். 1958ல் வன்னியசிங்கம் தெரவித்த அச்சம் 1983ல் வெளிப்படையாக வடிவமெடுத்தது.


இதே ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசியற் கைதிகாளாகவிருந்த தங்கத்துரை, குட்டிமணி, னுச ராஜசுந்தரம் உள்ளிட்ட 53 தமிழர்கள் சிறைக்காவலர்களாலும் சிங்கள இனவெறிபிடித்த கைதிகளாலும் மிகக் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து இரண்டே கல் தொலைவில் வதியும் இலங்கையின் நிறைவேற்றுமதிகாரமுள்ள சனாதிபதி துசு ஜெயவர்த்தனாவிடம் இத்தகைய கொடூரம் எவ்வாறு நிகழ்ந்தது என ஐனெயை வுழனயல செய்தியாளர் வினாவியபோது தனக்குத் தெரியாதென ஒற்றைவரியில் கூறினார். 1977ல் போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று சிங்கள மக்கள் விரும்புவதாக பாராளுமன்றில் கூறியவர் இதே துசு ஜெயவர்த்தனா என்பது நினைவு கூரத்தக்கது.


1983 இனப்படுகொலைக்கு முன்பே இந்தியாவில் தஞ்சம் புகுந்த நான் இந்தியத் துணைக்கண்ட தலைமை அமைச்சர் இந்திராகாந்தி அம்மையருடன் நேர்காணல் நடாத்திய போது “இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை புநழெஉனைந” என பாராளுமன்றத்தில் எடுத்துரைத்துள்ளேன் என்றார். இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை என வலியுறித்திய அவர் சிங்கள அரசின் அனுசரணையுடன் நடைபெறும் சிங்களக்குயேற்றம்தான் இனஅழிப்பின்; மிகப்பெரியக்காரணி எனக் கூறினார் எம் இனத்தின் சாபக்கேடு இத்தகைய சிந்தனையுள்ள தலைவர் யாரும் இந்திய ஆட்சில் பின்னர் அமரவில்லை.

1983ல் ஏற்பட்ட இனப் படுகொலையை அடுத்து 1990களின் பல தாக்குதல்களை சிங்கள அரசு நடாத்தியது 1995ல் சந்திரிக்காவின் மாமா ரத்வத்தை தலைமையிலான இரணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி இங்குள்ள மக்கள் அழுது புரண்டு வெறுங்கையோடு வன்னி நோக்கி இடம் பெயர்ந்த நிகழ்வு நினைவுகொள்ளத் தக்கது. எழில் கொஞ்சும் யாழ்ப்பாணத்தை “யாழ்ப்பாணபட்டின” எனச்சிங்களப் பெயரிட்டு சிங்கக் கொடி யையும் ஏற்றி வெறியோடு கொக்கரித்தார் மாமனை மாவீரர் என்று கூறி பட்டமளித்தார் அப்போதைய குடியரசுதலைவர் சந்திரிகா.


1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் எற்ற பெயரில் அமைதிகாப்பதாக வந்திறங்கிய இந்திய இராணுவம் எம்மினத்திற்கும் எம் மண்ணிற்கும் பேரழிவை ஏற்படுத்தியது ஐனெயைn pநயஉந முநநிiபெ கழசஉந. ஐnழெஉநவெ pநழிடந மடைடiபெ கழசஉந. ஆக உருவெடுத்தது அமைதிக்க வந்த படை பெரும் இன அழிப்புக்கு துணைபோனதை வரலாறு சான்று கூறும் இவ்வொப்பந்தம் உருவாகிய போது இதனை முதலின் கண்டித்தவன் யான். ஐவ ளை ய தழiவெ உழnளிசையஉல டில வாந டிழவா புழஎநசnஅநவெள என நான் கூறியது இந்திய இதழ்களில் வெளிவந்தது. இவ்வித அறிக்கையை நான் வெளியிட்டதில் ஆத்திரமடைந்த இ;ந்திய உளவுப்படையினர் (சுயுறு) இந்திய மண்ணிலிருந்து எவ்விதம் இந்தியாவை தாக்கி எழுத முடியும் என வினாவிய போது தமிழீழம் என்ற குழந்தையை நாம் தான் பெறுவதென உறுதி பூண்டிருந்தோம் இந்தியா மருத்துவச்சியாக உதவிபுரியும் என எதிர்பாத்தோம். ஆனால் இந்தியா கருவிலேயே எம் ஈழத்தை சிதைந்துவிட்டது என்றேன். ஆனால் உங்கள் ஒப்பந்த முன்னுரையில் உள்ள ஒரு விடயம் மனதிற்கு சற்று ஆறுதலளிக்கின்றது அது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகணம் தமிழரின் வரலாற்றுத் தாயகம் என ஏற்றுக்கொண்டது. நீங்கள் ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டபடி கல்லோயா, மதுறுஓயா, மணலாறு போன்ற குடியேற்றத் திட்டங்களிலிருந்து சிங்களவர்கள் வெளியேற்றப்படவேண்டும். இனிமேல் சிங்களவர்கள் குடியேற்றப்படாதவகையில் பாதுகாக்கவேண்டும். வரைபடம் புள்ளிவிவரங்களோடு சுட்டிக் காட்டியபோதும், நிறைவேற்றறுவதாக வாக்குறுதி அளித்தபோதும் வடக்கு கிழக்கு இணைப்பதற்கு இந்தியா எதுவும் செய்யவில்லை 19 ஆண்;டுகள் உருண்டோடிய நிலையில் சிங்கள நீதிபதிகளின் துணையோடு வடக்கு கிழக்கைத் துண்டாடிய போது இந்தியா ஏதும் செய்யவில்லை மாறாக அமைதி காத்தது இதையோட்டி நான் நாடாளுமன்றத்தில் குரலெலுப்பியதோடு அறிக்கைகள் பல வெளியிட்டேன் ஆனால் இந்தியாவின் மௌனம் தொடர்கிறது. வடக்கு கிழக்கு இணைப்பையே ஏற்படுத்த மறுக்கின்ற இந்திய அரசு, ஈழத் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவல் பற்றி பேசுவது நகைப்பிற்குரியது. தமிழரின் நிலம் பறிக்கப்பட்ட நிலையில் தமிழருக்கு அதிகாரப்பரவல் வழங்க முடியும் என சிங்களவன் எம்மை ஏமாற்றுகிறான் என்பது எமக்குத் தெரியும் ஆனால் இந்திய அரசும் இத்துரோகத்திற்கு துணை போவது தான் எம்மை வாட்டி வதைக்கின்றது.


2009- வன்னியல் ஏற்பட்ட பேரழிவு

2009ஆம் ஆண்டு இந்தியாவின் துணையோடு 20க்கு மேற்பட்ட நாடுகள் வணங்கா மண் வன்னியில் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் தமிழினத்தை பூண்டுடோடு அழிக்கின்ற முயற்சிக்கு தமிழக முதல்வர் மு.க. கருணாநிதி துரோகி என்றபட்டத்தை விரும்பி வாங்கிகொண்டார். அவருக்கு கிடைத்தபட்டங்கள் காலப்போக்கில் மறைந்தாலும் துரோகிப்பட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். சென்ற ஆண்டு முள்ளிவாய்க்காலில் எம்மை முடித்துக்கட்ட தொடுக்கப்பட்ட போரில் தாம் வெற்றி பெற்றதாக சிங்கள அரசு கொக்கரித்து கொண்டாடுகிறது ஆனால் எம்மைப்பொறுத்தவரையில் முள்ளிவாய்க்கல் போர் மற்றுமோர் வடிவமெடுத்தது உலகத்தமிழர்களை ஒன்றிணைத்துள்ளது 2008ல் புலம்பெயர்ந்த தமிழரிடம் இப்போராட்டத்தை ஒப்படைக்கிறேன் என்று எம் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியதற்கமைய மிகப்பெரிய வரலாற்றுச் சுமை எம்மீது சுமத்தப்பட்டுள்ளது வாழ்வா சாவா என்ற இப்போரட்டத்தில் எல்லோரும் பங்காளராகமாறி விடுதலைப் போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்வோம் நடந்த முள்ளிவாய்கால் போரில் ஏறக்குறைய 40 ஆயிரம் போராளிகளையும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழரின் உயிர்களை இழந்துள்ளோம். இன்னும் வதை முகாம், சிறைகளில் சித்திரவதைக்குள்ளாகும் எம்முறவுகளை மறக்க முடியாது. எண்ணிக் கையை கணக்கிட முடியாமல் ஐ.நா. உள்ளிட்ட நிறுவனங்கள் தத்தளிக்கின்றன. எண்ணிக்கை பற்றிய விவாதம் தேவையில்லை தமிழினம் அழிக்கப்படுகின்றது என்பதுதான் உன்மை.

இன்றைய சூழ்நிலையில் தலைமைதாங்கி வழிநடத்த தக்க தலைமை அங்கு இல்லை தயங்கும் தலைமைப்பீடமும் தத்தளிக்கும் தலைமைப்பீடமும் தடம்புரண்ட தலைமைப்பீடமும் இருப்பதை நாம் காண்கின்றோம். அங்குள்ள அரசியல் நெருக்கடி தமிழ்த் தலைமைப்பிடத்திலும் அத்தகைய சூழலை ஏற்படுத்தியிருக்கலாம். இந்நிலைiயில் அங்குள்ள தமிழ் மக்களை இந்நிலையில் காப்பற்றுவது எமது கடமை இன்றைய சூழ்நிலையில் இழந்த இறைமையை நிலை நாட்டும் வகையில் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை நிலைநாட்டி அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசு உருவாகியுள்ளது. தமிழன் வாழாத நாடில்லை ஆனால் தமிழனுக்கோர் நாடில்லை இந்நிலை தொடருமானால் ஈழத்தமிழினம் மட்டுமல்ல உலகெல்லாம் சிதறுண்டு வாழும் தமிழினமும் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து அழிந்து போகும் நிலையேற்படும். எடுத்துக்காட்டாக தென்னாபிரிக்கா, மொறிசியஸ், கயானா நியூ கினியாத் தமிழர்கள் போல இன மொழி அடையாளம் இழந்து உலகம் எள்ளிநகையாடும் நிலைக்குத் தள்ளப்படுவோம். ஈழம் வாழ் தமிழர்களைக் காப்பாற்றமட்டும் தமிழீழத்தைக் தோற்றுவிக்கவில்;லை. எமக்கென்றொரு நாடு தோற்றுவிக்கப்பட்டுவிட்டால் உலகம் எமை மதித்துப்போற்றும். ஐ.நா மன்றில் 20ற்க்கு மேற்ப்பட்ட நாடுகள் தமிழீழத்தையும்விட சிறியவை, தனிக்கொடி தாங்கி நிற்கின்றன சிங்கப்பூர் அளவில் யாழ்ப்பாணத்தையும் விடச்சிறியது. அது சிங்காரபூமியாக உலகத்தின் கவனத்தை ஈர்த்து விளங்குகிறது.


இசுரேலின் வெறியாட்டத்தை நாம் கண்டிக்கிறோம் ஆனால் இசுரேல் படிப்பிக்கும் பாடமென்ன? 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நாடிழந்து உலகெல்லாம் சிதறுண்டு வாழ்ந்த இனம், தாய்மொழியான கீபுறுவை காப்பாற்ற முடியாமல் தத்தளித்த இனம், வனாந்திரபூமியாய் இருந்த இசுரேலை 1948ல் கட்டியெழுப்பியது யூதஇனம். போலித்தீன் உறைகளில் மரக்கறி உற்பத்தி செய்கிறது, கடல்நீரை நன்னீராக்குகிறது. உலகில் வல்லரசாகவும் விளங்குகின்றது. எண்ணிக்கையளவில் இசுரேலில் வாழும் யூதர்களைவிடவும், அமெரிக்கவில் வாழும் யூதர்களின் எண்ணிக்கை அதிகம். யூதர்களுக்கென்றொரு நாடு இருப்பதனால் அமெரிக்க யூதர்கள் அமெரிக்காவின் நிதி, நீதி நிர்வாக அலகுகளை ஆட்டிப்படைக்கின்றனர்.


நாடுகடந்த தமிழீழ அரசு தான் ஈழத்தமிழர்களை காப்பற்ற முடியும்


இலங்கையில் ஈழத்தமிழரின் குரல் முடக்கப்பட்டுள்ளது. உரிமைக்குரல் எழுப்பினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை இன்றைய சூழ்நிலையில் களத்தில் வாழும் மக்களுக்கு பக்கபலமாக விளங்கக்கூடியவர்கள் புலம்பெயர் ஈழத்தமிழ்மக்கள் மட்டுமே என்றால் மிகையாகாது. புலம்பெயர் தமிழர்களின் ஒருமித்த குரலாக விளங்கப்போவதே நாடு கடந்த தமிழீழ அரசு. இந்த அரசு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு வெளிப்படையாக இயங்குகிறது.


ஆயுதம் தாங்காத நிலையில் பயங்கரவாதி எனப் பட்டஞ்சூட்ட முடியாத நிலையில் மக்களாட்சிக்கு வழிசெய்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசு உலகின் மேற்கு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா எதைச்சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றது. ஆனால் சிறீலங்கா அரசு சினங்கொண்டு உலக நாடுகளின் தூதுவர்களை அழைத்து உங்கள் நாடுகளில் நாடு கடந்த தமிழிழீழ அரசை இயங்க விடாது தடுக்ககும்படி வலியுறுத்துத்துகின்றது. கண்டிக்கும் தொனியிலும் சொல்கிறது. கெஞ்சியும் பார்க்கிறது.


இலங்கையின் அமைச்சர்களான புடு பீரிஸ், கோத்தபாய ராஜபக்ச போன்றவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசில் அங்கம் வகிப்பவர்கள் இலங்கையில் காலடி வைக்கக்கூடாதென்றும், உயிருக்கு உத்தரவாதமில்லையெனவும் உடமைகள் பறிக்கப்படுமெனவும் அவர்களைத்தேடுவோர்களின் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனப்பலவாறாக மிரட்டியுள்ளது. அற நனைந்தவனுக்கு குளிரென்ன கூதலென்ன என எண்ணித்துணிந்த பின்தான் நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கத்தில் இணைந்துள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசு செங்குறுதி சிந்தாத சிந்தனை புரட்சியாகும் சிந்தனைப் புரட்சி வந்தனைக்கும் வரவேற்புக்கும் உரியது. ஈழத்தமிழரின் ஏக்கம் போக்கி ஆக்கம் தரவல்லது.


சென்ற ஆண்டு மே மாதத்தில் எமக்கேதோ தோல்வி நிலை ஏற்ப்பட்டுவிட்டதாக சிங்கள இனவெறியரசு வெற்றிவிழாக் கொண்டாடுகிறது. அவர்களின் கொட்டமடக்கும் வகையில் புலம்பெயர் நாடுகளெங்கும் மே 18ம் நாள் நாம் ஒன்றுகூடி எழுப்பப்போகும் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.


“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்பது எங்கள் தேசியத் தலைவர்தந்த தாரக மந்திரம். அத்தாரக மந்திரத்திற்கு உருதியாக நாடு கடந்த தமிழீழ அரசு வடிவம் கொடுக்கும். விரைவில் ஐ.நா மன்றில் எமது புலிக்கொடி பறப்பதுறுதி. தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழந்து பணிந்திட வாரீர் என தமிழீழ மக்களையும் தரணிவாழ் மக்களையும் ஒன்று கூடி அழைக்கின்றோம். என்றும் எங்கள் தோன்றத்துணையாய் நிற்கும் தேசியத்தலைவரின் வழிகாட்டலில் எம் விடுதலைப்பணி தொடரட்டும்.


“இன்றில்லேல் என்று நாமின்றேல் எவர்” என்பது நாம் ஓங்கி ஒலிக்கின்ற தாரக மந்திரமாகட்டும்.


“தமிழன் வாழவேண்டின், தமிழன் தன்னை ஆழவேண்டும்.

மா. க. ஈழவேந்தன்.


நாடு கடந்த தமிழீழ அரசின் கனடாப் பேராளர்


முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

Monday, May 3, 2010

நாடு கடந்த தமிழீழ அரசு கனடாதேர்தல் முடிவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு கனடாதேர்தல் முடிவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்காக கனடிய தமிழ் மக்கள் 25 பிரதநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மே 2ஆம் திகதி நடைபெட்டரு அதன் முடிவுகள் அருவிக்கபட்டுள்ளன.


TGTE – District .1 – Toronto GTA and Vicinities

நா.க.த.அ - மாவட்டம் . 1

Total VotesInvalid VotesValid Votes
70062
7004

NoCandidate PhotoNameVotes Won
1joeJoe ANTONY

ஜோ அன்ரனி

3388
Elected
2Pon BALARAJAN

பொன் பாலராஜன்
3777
Elected


3M.K. EALAVENTHAN

எம்.கே ஈழவேந்தன்
4161
Elected

4PirabhaPiraba NALLIAH

பிரபா நல்லையா
3175
5Tharani PRAPAHARAN

தாரணி பிரபாகரன்
4967
Elected


6SabapathyDeva SABAPATHY

தேவா சபாபதி
2754
7SriSri Bavan SRI-SKANDA-RAJAH

சிறீ பவன் சிறீ-ஸ்கந்த-ராஜா
2691
8ThiruThiru S. THIRUCHELVAM

திரு எஸ் திருச்செல்வம்
4936
Elected

9NimalNimal VINAYAGAMOORTHY

நிமால் விநாயகமூரத்தி
2197

TGTE – District . 2 – Eastern Ontario

நா.க.த.அ - மாவட்டம் . 2

Total VotesInvalid VotesValid Votes
12026
5
12021

NoCandidate PhotoNameVotes Won
1Jeybalan Jeyabalan ALAGARATNAM

ஜெயபாலன் அழகரட்ணம்
3594
2Kirubairajah Henry KIRUPAIRAJAH

ஹென்றி கிருபைராஜா
2420
3Easan Esan KULASEKARAM

ஈசன் குலசேகரம்
7810
Elected

4Vin Mahalingam Vin MAHALINGAM

வின் மஹாலிங்கம்
3845
5 R. Rajkumar NADA

ஆர். ராஜ்குமார் நடா
3692
6vanitha Vanitha RAJENDRAM

வனிதா ராஜேந்தரம்
8451
Elected

7 Suresh RATNABALAN

சுரேஷ் ரட்ணபாலன்
6109
Elected
8shean Srisangar (Shean) SINNARAJAH

சிறிசங்கர் (சியான்)சின்னராஜா
2541
9sridas Selvanayaki SRIDAS

செல்வநாயகி "ஸ்ரீதாஸ்"
4632
10 Waran VAITHILINGAM

வரன் வைத்திலிங்கம்
6523
Elected

11Yogendran Mariampillai Anjalo YOGENDRAN

மரியாம்பிள்ளை அன்ஜலோயோகந்திரன்
6478
Elected


TGTE – District .3 Western Ontario

நா.க.த.அ - மாவட்டம் . 3

Total VotesInvalid VotesValid Votes
6621 4 6617

NoCandidate PhotoNameVotes Won
1Charles Charles DEVASAGAYAM

சார்ள்ஸ் தேவசகாயம்
2382
2Suren Suren MAHENDRAN

சுரேன் மகேந்தரன்
5002
Elected
3Thanabalan S.M Thanapalan MARKANDU

எஸ்.எம் தனபாலன்மார்க்கண்டு
2501
4Balan Balan RATNARAJAH

பாலன் ரட்ணராஜா
4844
Elected
5sam Sam SANGARASIVAM

சாம் சங்கரசிவம்
4997
Elected
6shan Iyampillai (Shan)SHANMUGANATHAN

ஐயம்பிள்ளை (ஷான்)சண்முகநாதன்
5049
Elected
7 Ram SIVALINGAM

ராம் சிவலிங்கம்
4993
Elected

TGTE – District .4 Quebec & Eastern Canada

நா.க.த.அ - மாவட்டம் . 4

Total VotesInvalid VotesValid Votes
5419 - -

NoCandidate PhotoNameVotes Won
1 Kanthiah THEIVENTHIRAN

கந்தையா தெய்வேந்திரன்
2690
Elected

2Nanthan Maharajah (Nanthan)NANTHAKUMAR

மஹாராஜா (நந்தன்)நந்தகுமார்
2818
Elected

3Sivananthan Muthuckumaru SIVANANTHAN

முத்துக்குமாரு சிவானந்தன்
1886
4Nirutha Niruthan NAGALINGAM

நிருதன் நாகலிங்கம்
2794
Elected
5Raveendran Majendran (Indran) RAVEENDRAN

மாஜேந்திரன்(இந்திரன்)ரவீந்திரன்
2586
6Luxan Luxan SIVAPRAGASAPILLAI

லக்சன் சிவப்பிரகாசபிள்ளை
3221
Elected

7 Roy Yarl Vaanan WIGNARAJAH

றோய் யாழ்வாணன்விக்னராஜா
1793
Cornwall, Ottawa (கோன்வால், ஒட்டாவா)
8Bhuvan Bhuvan-Endra NADARAJAH

புவனேந்திரா நடராஜா
2557
Elected

9majooranManoharan MAJOORAN

மனோகரன் மஜூரன்
2435

TGTE – District .5

நா.க.த.அ - மாவட்டம் . 5

NoCandidate NameResults
1Mokanasingham MarkanduElected
2Sothinathan SumughanElected
3Nagendra KatpanaElected
4Muthukumarasamy RatnaElected
5Sivasothy JeyamathyElected