Tuesday, July 13, 2010

தொடரும் தமிழினப் படுகொலை!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தோடு முடிந்துவிடவில்லை தமிழினப் படுகொலை. இன்றும் இலங்கையில் காணமற்போவரும், கண்முன்னால் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் ரகசியத் தடுப்புமுகாம்களிலும் அரங்கேறிவருவதோடு மாத்திரமல்லாமல் அன்றாடம் தங்கள் தொழில் தேவைகளுக்காக கடல் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்கள் தமிழ் கடற்தொழிலாளரையும் பகிரங்கமாகச் சுட்டுக்கொலைசெய்து வருகின்றது இலங்கை இனவெறி அரசு.
.இது தொடர்பாகக் கண்டனம் தெரிவித்த இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். 
First Published : 13 Jul 2010 01:58:55 AM IST

சென்​னை​யில் திங்​கள்​கி​ழமை கைது செய்​யப்​பட்ட நாம் தமி​ழர் இயக்​கத் தலை​வர் சீமான்.
சென்னை, ஜூலை 12: வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமான் சென்னையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசினார். அப்போது, வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக அவர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்வதற்காக அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் திங்கள்கிழமை காலை சீமான் செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, பத்திரிகையாளர் மன்றத்தைச் சுற்றிலும் உள்ள எல்லா சாலைகளிலும் 200-க்கும் மேற்பட்ட போலீஸôர் நிறுத்தப்பட்டிருந்தனர். செய்தியாளர்களைச் சந்திக்கும் முன் சீமானைக் கைது செய்வதற்காக போலீஸôர் தயார் நிலையில் காத்திருந்தனர்.

இந்தச் சூழலில் வேகமாக கார் ஒன்றில் வந்த சீமானை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் போலீஸôர் மறித்து, கைது செய்தனர்.

அப்போது சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதைக் கண்டித்து நான் பேசியதை, இந்திய - இலங்கை நட்புறவைக் கெடுக்கும் விதத்தில் நான் பேசியதாகக் கூறி என் மீது வழக்குத் தொடரப்ட்டுள்ளது.

இதே பிரச்னைக்காக, தி.மு.க. சார்பிலும் இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அது மட்டும் நட்பை வளர்க்கக் கூடியதா?

தமிழக மீனவர்களைக் கொன்றதைக் கண்டித்து நான் பேசியது வன்முறையைத் தூண்டும் எனில், நம் மீனவர்கள் 501 பேரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையின் செயல் வன்முறையைத் தூண்டாதா?

இப்போது மீண்டும் இலங்கை கடற்படை நம் மீனவர்களைத் தாக்கியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும். மாறாக, பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் என் மீது வழக்கு தொடரப்படுகிறது. இதுதான் தீர்வா என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

கைது செய்யப்பட்ட சீமான், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,

ஜூலை 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சீமான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

வைகோ கண்டனம்: சீமான் கைது செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசு, தமிழக மீனவர்களையும் சுட்டுக் கொல்வதைக் கண்டித்து பேசியதற்காக சீமானை போலீஸôர் கைது செய்துள்ளனர்.

இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினால், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று தனது அமைச்சர் மூலம் முதல்வர் கருணாநிதி மிரட்டுகிறார். இலங்கை அரசைப் பற்றி பேசுவோரை சிறையில் தள்ள புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் கூறுகிறார்கள்.

சீமானைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்துரிமையை ஒடுக்க அடக்குமுறையை ஏவும் தி.மு.க. அரசை எதிர்த்து ஜனநாயக சக்திகள் போராட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்
Source: .http://www.dinamani.com
Kindle Wireless Reading Device, Free 3G, 6" Display, White, 3G Works Globally - Latest Generation


No comments:

Post a Comment