Sunday, February 28, 2021

   இலங்கையின் இனவன்முறை  வரலாறு – 3

   தொகுப்பு தேசமுகி

1875-1948 முதல் இலங்கைக் கொடி பிரித்தானியா இலங்கையின் கொடியும்  பௌத்த விகாரை யையும், யானையையுமே உள்ளடக்கியிருந்தது. பிரிட்டிஷ் காலத்திற்கு முன்னும் பின்னும் பௌத்த துறவற சமூகத்தின் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஆதிக்கங்களை தனியாக ஆய்வதன் மூலமே இதன் யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளமுடியும். மதம் என்பது ஒரு எளிய அமைப்பு அல்ல மாறாக பல சந்தர்ப்பங் களில் அதிகாரத்தின் வலுவான சக்தியாக விளங்கியது. பிரிட்டிஷ் காலனித்துவ காலங்க -ளின் பொழுது ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத் தையே ஆங்கிலேயர்கள் நிறுவிய பொழுதும், பௌத்தத்திற்கும் இலங்கை மக்களுக்கும் இடையிலான உறவை மதிப்பிட்டு பிரித்தாளும் பிரித்தானியாவின் தொலைநோக்குச் சூழ்ச்சி யின்  இராசதந்திரக் கொள்கையைத் தெளிவாகக் கடைப்பிடித்தது. இங்கு முக்கியமாக நாங்கள் கவனிக்க இருப்பது இலங்கையின் சுதந்திரத்தின் பின்னரான இனவெறி வன்முறை வரலாறு ஆகும். எனவே 1948-50 முதல் கொடி பின்னர்  1950-72 வரை கொடி மற்றும் 1972 முதல் இப்பொழுது பயன்படுத்தும் நவீன பதிப்பு வரை இவ்வாரம் பார்ப்போம். 

         சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று 1948 ஜனவரி 16 அன்று பாராளுமன்றத்தில் மட்டக்களப்புக்கான நாடாளுமன்ற உறுப்பினர் முதலியார் ஏ.சின்னலப்பை பரிந்துரைத்தார். சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.செனநாயக்க, பிப்ரவரி 4, 1948 அன்று நடந்த விழாவில் சிங்கக் கொடியை ஏற்றினார். இக்கொடியானது ஒரு மஞ்சள் சிங்கம் வலது கையில் ஒரு வாளைப் பிடித்து, கொடியை எதிர்கொண்டு, அடர் சிவப்பு பின்னணியில், மஞ்சள் நிற விளிம்புடன், நான்கு உச்சங்களுடன் நான்கு மூலைகளிலும் புத்த தாகபாவை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டு இருந்தது.               

   



     

இலங்கையில் உள்ள சிறுபான்மையினர் இந்த கொடி பெரும்பான்மை சிங்களவர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதாக உணர்ந்தனர். இந்த கேள்வியை ஆராய்ந்த ஒரு பாராளுமன்ற ஆணையம் தேசிய கொடிக் குழு மார்ச் 1948 இல் உருவாக்கப்பட்டது. இறுதியாக ஒரு புதிய கொடியை முன்மொழிந்தது.  மார்ச் 2, 1951 இல், நாட்டின் தேசியக் கொடியாக சில மாற்றங்களுடன் அதிகாரப்பூர்வமானது.  சிங்கக்; கொடியின் மஞ்சள் எல்லை இரண்டு செங்குத்து கோடுகளை சுற்றி உயர்த்தப்பட்டது, முஸ்லிம்களுக்கு பச்சை மற்றும் தமிழர்களுக்கு செம்மஞ்சள். இரண்டு செங்குத்து பட்டைகள் சேர்க்கப்பட்டது. இந்நேரத்திலும் கூட யூனியன் ஜக் கொடியானது ஓக்ரோபர் 29 1953 வரை இலங்கையில் தொடர்ந்து பறந்தது. இலங்கை 1948 முதல் 1952 வரை ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் முடியாட்சியின் கீழும், 1952 முதல் 1972 வரை இவரது மகளான இரண்டாவது எலிசபெத் மகராணியின் முடியாட்சியின் கீழும் இருந்தது. இறுதியாக 1972 ஆம் ஆண்டில், நாடு இலங்கை ஸ்ரீலங்காக் குடியரசாக மாறியது. அப்பொழுது, கொடி மீண்டும் ஒரு முறை மாற்றப்பட்டது, 

        மே 22, 1972 அன்று கொடியில் மேலும் மாற்றம் செய்யப்பட்டது. சிங்கத்தின் பின்னால் உள்ள அடர் சிவப்பு பகுதியின் மூலைகளில் கோயில்களின் உச்சியில் இருந்ததைப் போன்ற மஞ்சள் ஸ்பியர்ஸ் இருந்தன. இலங்கையில் பௌத்தம் கொண்டுள்ள செல்வாக்கைக் குறிப்பதற்கும், பௌத்தத்தின் நான்கு நற்பண்புகளான கருணை, இரக்கம், மகிழ்ச்சி மற்றும் சமத்துவம் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் அரசமரத்தின் நான்கு அழகிய இலைகள், பௌத்த சின்னமாக, நான்கு மூலைகளிலும் நான்கு உச்சங்களை மாற்றுவதற்காக சேர்க்கப்பட்டன. விளக்கங்களின்படி, கொடியில் உள்ள சிங்கம் சிங்கள இனத்தை குறிக்கிறது, சிங்கத்தின் வாள் நாட்டின் இறையாண்மையை குறிக்கிறது, சிங்கத்தின் வால் பௌத்தத்தின் உன்னதமான எட்டு மடங்கு பாதையை குறிக்கிறது. சிங்கத்தின் தலையில் சுருள் முடி மத அனுசரிப்பு, ஞானம் மற்றும் தியானம் ஆகியவற்றைக் குறிக்கிறது, தாடி வார்த்தைகளின் தூய்மையைக் குறிக்கிறது, வாளின் கைப்பிடி நீர், நெருப்பு, காற்று மற்றும் பூமியின் கூறுகளை எடுத்துக்காட்டுகிறது, மூக்கு புத்திசாலித்தனத்தைக் குறிக்கிறது, இரண்டு முன் பாதங்கள் தூய்மையைக் குறிக்கின்றன. செப்டம்பர் 7, 1978 அன்று இலங்கையின் கொடியின்இலைகள் இயற்கையாக அமையும் வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டன.













2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பச்சை மற்றும் செம்மஞ்சள்; இரண்டு செங்குத்து கோடுகள் இல்லாத தேசியக் கொடியின் மாற்றப்பட்ட பதிப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரை ஆதரிக்கும் பல எதிர்ப்பாளர்களால் பாராளுமன்றத்தின் முன்னும், லஞ்ச ஆணையத்திற்கு வெளியேயும் பயன்படுத்தப்பட்டது. இலங்கையின் அரசியலமைப்பில் கொடி தேசியக் கொடிக்கு முரணாக இருப்பதால், தேசியக் கொடிக்கு பதிலாக மாற்றப்பட்ட கொடியைக் காண்பிப்பது பல சர்ச்சையை உருவாக்கியது. போராட்டக்காரர்களில் சர்ச்சைக்குரிய கொடியை அசைக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) இருந்தனர். இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறி இருந்தது. இதன் பின்ணணியில் ராஜபக்ச சகோதரர்கள் கைவண்ணம் இருந்தது. முரண்பாட்டிற்குரிய இந்த தேசியக்கொடி விவகாரம் சட்டப்படி குற்றம், ஆயினும் எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மைத்திரி, ரணில் அரசாங்கமும் கண்டும் காணாமல் கடந்து சென்றது. 

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, சுதந்திரத்திற்கான பொது அழுத்தம் அதிகரித்தது. பிரிட்டிஷ் ஆளும் இலங்கை காலனி 1948 பிப்ரவரி 4 அன்று சுதந்திரம் அடைந்தது, திருத்தப்பட்ட அரசியலமைப்பு அதே தேதியில் நடைமுறைக்கு வந்தது. இலங்கை சுதந்திரச் சட்டம் 1947 இன் கீழ் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்துடனான இராணுவ ஒப்பந்தங்கள் நாட்டில் அப்படியே பிரிட்டிஷ் வான் மற்றும் கடல் தளங்களை பாதுகாத்தன் சிலோன் இராணுவத்தின் உயர் பதவிகளில் பெரும்பாலானவர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் தொடர்ந்து நிரப்பினர். டான் சேனநாயக்க இலங்கையின் முதல் பிரதமரான பின்னர் 1948 இல், இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக விண்ணப்பித்தபோது, சோவியத் யூனியன் விண்ணப்பத்தை வீட்டோ செய்தது. இலங்கை பெயரளவில் மட்டுமே சுதந்திரமானது என்று சோவியத் யூனியன் நம்பியது. சுதந்திரத்தின் பின்னரும் வெள்ளையர்கள், படித்த உயரடுக்கினர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாலும் ஆங்கிலேயர்கள் அதன் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். 1948ல் டி.எஸ்.சேனநாயக்க எடுத்த தீர்மானமான முடிவெடுத்து  1949ஆம் ஆண்டில், இலங்கைத் தமிழர்களின் தலைவர்களின் ஒப்புதலுடன், யூ.என்.பி அரசாங்கம் இந்திய தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் வாக்களிப்பு உரிமையை ரத்து செய்தது. (தொடரும்)



No comments:

Post a Comment